‘அண்ணா! யாரோ என்ன கடத்திட்டாங்க’... ‘தங்கையிடமிருந்து வந்த ஃபோன் கால்’ ... ‘பதறிப்போன குடும்பத்துக்கு’... ‘காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காதலனுடன் சேர்ந்து, தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி, தந்தையிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, இளம்பெண் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகள் வித்யா, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், செவிலியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து, மர்மநபர் ஒருவர் தன்னை கடத்திவிட்டதாக, தனது சகோதரருக்கு கூறிவிட்டு செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளார் வித்யா. சில மணி நேரம் கழித்து, வித்யாவின் தந்தை ஆறுமுகத்தை, இண்டெர்நெட் கால் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், 10 லட்சம் ரூபாய் பணத்தை தான் சொல்லும் இடத்திற்கு வந்து கொடுக்கவில்லை என்றால் வித்யாவை துண்டு துண்டாக வெட்டி வீசிவிடுவதாக மிரட்டி உள்ளார்.
இதனால் பதறிப்போன வித்யாவின் தந்தை, தனது உறவினர்களுடன், கிருஷ்ணகிரியில் இருந்து, சென்னை கோயம்பேட்டிற்கு வந்து, இங்குள்ள காவல் நிலையத்தில், தனது மகள் கடத்தப்பட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வித்யா காரைக்காலில் உள்ள கல்லூரியில் படித்தபோது, என்ஜினீயரிங் மாணவரான மனோஜ் என்பவரை காதலித்ததாகவும், அவர்கள் இருவரும், தற்போது வரை காதலித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. இருவருமே நல்ல வேலையில் இருந்தாலும், வேறு வேறு சாதி என்பதால் இவர்களின் காதலுக்கு, வித்யாவின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து மலேசியாவில் உள்ள மனோஜை தொடர்பு கொண்டு, வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டால் பிரித்துவிடுவார்கள் என்றும் நாட்டைவிட்டுச் சென்று கலப்பு திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, மனோஜ் ஊருக்கு திரும்பி வந்துள்ளார். இங்கே இருவரும் சேர்ந்து, கனடாவுக்கு செல்ல அதிக பணம் தேவைப்படும் என்பதால், தனது தந்தையிடம், தன்னை கடத்தி விட்டதாக கூறி பணம் கேட்டு மிரட்டும்படி காதலனுக்கு, திட்டம் வகுத்து கொடுத்துள்ளார் வித்யா. இதையடுத்து கடத்தல் நாடகமாடிய காதலர்களை, கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்ற செய்திகள்
‘அடுத்த 2 நாட்களுக்கு’.. ‘14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்’..
தொடர்புடைய செய்திகள்
- 'காதலித்துவிட்டு, காதலன் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'காதலி எடுத்த விபரீத முடிவு'!
- ‘காதலியின் வீட்டின் முன்பு’... ‘காதலனின் குலை நடுங்க வைக்கும் காரியம்’... ‘பதறவைக்கும் சம்பவம்'!
- ‘6 பேரால் 2 நாட்களாக’.. ‘சிறுமிக்கு நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’.. ‘மயக்க நிலையில் மீட்ட பின்’.. ‘ஊர்கூடி செய்த கொடூரம்’..
- ‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த..’ 3 வயது பெண் குழந்தை.. ‘சிதைந்த நிலையில் பிளாஸ்டிக் பையில் கிடைத்த பயங்கரம்..’
- 'காதலனுடன் சேர்ந்து சிறுமியை கடத்திய பெண்'... 'சென்னையில் நடந்த பயங்கரம்' ... பரபரப்பு வாக்குமூலம் !
- சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தையை கடத்திய மர்ம நபர்..! அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்..!
- ‘வேறு சாதி பையனை காதலித்ததால் ஆத்திரம்’... ‘கிராம மக்கள் ஒன்றுகூடி செய்த அதிர்ச்சி சம்பவம்!
- 'காதல் தோல்வியால் விபரீத முடிவு'... பதறவைத்த சம்பவம்!
- 'என் தங்கச்சியவா லவ் பண்ற?'... 'கத்தியால் குத்திய கும்பல்'... நடுரோட்டில் 'நெஞ்சை பதறவைத்த' சம்பவம்!
- பிறந்து 7 நாட்களேயான ஆண் குழந்தை கடத்தல்.. 10 மணிநேரத்தில் குழந்தை மீட்பு.. காவல்துறைக்கு பாராட்டு!