கண்கலங்கிய அற்புதம்மாள்.. மகன் ஸ்தானத்தில் வெற்றிமாறன் கொடுத்த பரிசு.. Behindwoods விருது மேடையில் நெகிழ்ச்சி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

8 ஆவது Behindwoods Gold Medals விருது நிகழ்ச்சி, மே 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில், சென்னையின் தீவுத்தடலில் வைத்து மிகவும் சிறப்பாக நடந்து முடிந்தது.

Advertising
>
Advertising

Also Read | "பாவம்யா.. கல்யாணம் முடிஞ்சா... 3 நாளைக்கு இத பண்ணக் கூடாதா??.." வியப்பில் ஆழ்த்தும் வினோத பழக்கம்.. Trending

இரண்டு நாட்களிலும் ஏராளமான பிரபலங்கள், Behindwoods விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வெற்றிமாறன், செல்வராகவன், வெங்கட் பிரபு, எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன், நெல்சன், மணிகண்டன், யோகி பாபு, சதீஷ், சன்னி லியோன், லிஜோமோள் ஜோஸ், ஆண்ட்ரியா, ஞான வேல், லோகேஷ் கனகராஜ், ஜோனிதா காந்தி, அனிருத், யுவன் ஷங்கர் ராஜா, சாய் பல்லவி, பிரியங்கா மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பல பிரபலங்கள், இரண்டு நாட்களிலும் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பித்திருந்தனர்.

அதே போல, ராஜீவ் காந்தி வழக்கு தொடர்பாக சுமார் 31 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து சமீபத்தில் விடுதலை ஆன பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், Behindwoods கோல்டு மெடல்ஸ் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மகன் சிறையில் இருந்த, 31 ஆண்டுகள், அவரை எப்படியாவது விடுதலை செய்து விட வேண்டும் என்ற எண்ணத்தில், அற்புதம்மாள் மேற்கொள்ளாத முயற்சிகள் எதுவுமில்லை.

Golden icon of inspiration

எக்கச்சக்கமான தடைகள், தியாகம், பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை கடந்து, அற்புதம்மாளின் 31 வருட போராட்டம், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பேரறிவாளன் விடுதலை ஆன சமயத்தில் பலரும் அவரது தாய் அற்புதம்மாளின் தியாகம் குறித்தும் உருக்கமாக பேசி இருந்தனர். இந்நிலையில் தான், Behindwoods கோல்டு மெடல்ஸ் மேடையில் அற்புதம்மாளுக்கு, "Golden icon of inspiration" என்ற விருது வழங்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ ஒன்று, திரையில் ஓடியதும் அதனைக் கண்ட அற்புதம்மாள், ஒரு நிமிடம் கண் கலங்கிப் போனார். கண்ணீர் மல்க இயக்குனர் வெற்றிமாறன் கையிலிருந்து விருதை பெற்றுக் கொண்டார் அற்புதம்மாள்.

உங்க எல்லாரோட கூட்டு அன்பு தான் காரணம்..

தொடர்ந்து பேசிய அவர், "அனைவரின் ஒத்துழைப்பு இருந்ததால் தான் என்னால் ஜெயிக்க முடிந்தது. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு மிகவும் வித்தியாசமான மேடை இது. சிரிப்பு, ஆட்டம், பாட்டம் என இருக்கும் இந்த மேடையில், நான் இப்போது வந்து நின்றுள்ளேன். எனது 30 ஆண்டுகால போராட்டம் உங்கள் அனைவருக்குமே தெரியும். என் மனதில் இருந்ததெல்லாம் ஒரே ஒரு எண்ணம் தான். நிச்சயமாக என் மகனே காப்பாற்றியாக வேண்டும் என்பது மட்டும் தான் அது. ஒரு அம்மாவாக அது என் கடமை என்றே எனக்கு தோன்றியது. கண்ணுக்கு தெரியாத எத்தனையோ உள்ளங்கள், எனது மகன் விடுதலையாக வேண்டும் என்று வேண்டியது. அவர்கள் அனைவரின் கூட்டு அன்பு தான், எனது மகனை உச்சநீதிமன்றமே விடுதலை செய்யும் அளவுக்கு கொண்டு வந்துள்ளது. என் மகன் இனிமேலாவது நிம்மதியாக வாழ வேண்டும்" என தெரிவித்தார்.

அதே போல, மகனின் ஸ்தானத்திலிருந்து, இயக்குனர் வெற்றிமாறன் அற்புதம்மாளுக்கு புடவை ஒன்றையும் பரிசாக வழங்கினார்.

Also Read | "என்ன அவ கூட சேர்த்து வைங்க.." பிரித்த குடும்பம்.. நீதிமன்றத்தை நாடிய இளம்பெண்.. கடைசியில் நீதிபதி போட்ட உத்தரவு

ARPUTHAM AMMAL, ICON OF INSPIRATION, BGM AWARDS 2022

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்