‘அம்மா..அம்மா..’!.. வீடியோ காலில் கதறியழுத ராணுவ வீரர்.. கண்ணீரில் மூழ்கிய குடும்பம்.. ஊரடங்கில் நடந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாயின் இறுதிச்சடங்கிற்கு வரமுடியாமல் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் வாட்ஸ் அப் வீடியோ காலில் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே புக்கம்பட்டி அடுத்த அழகாகவுண்டனூரைச் சேர்ந்தவர் தங்கவேலு. இவரது மனைவி மாது. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மகன் சக்திவேல் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது சக்திவேல் ராஜஸ்தானில் ராணுவ பணியில் உள்ளார்.
கடந்த சில தினங்களாக சக்திவேலின் தாய் மாது உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தாய் இறந்த செய்தியை கேட்டதும் நொறுங்கிப்போன சக்திவேல் உடனே சொந்த ஊருக்கு செல்ல முயன்றுள்ளார். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் அவரால் தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியவில்லை.
இதனை அடுத்து அவரது உறவினர்கள் வாட்ஸ் அப் வீடியோ காலில் தாயின் இறுதிச்சடங்கை சக்திவேலுக்கு காண்பித்தனர். இதைப் பார்த்ததும் சக்திவேல் ‘அம்மா..அம்மா..’ என கதறி அழுதது அங்கு கூடியிருந்த உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோ வெளியாகி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
News Credits: Puthiya Thalaimurai
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "போராட்டக்களத்தில் ஒரு குட்டி ரிலாக்ஸ்"... "அறுபது மருத்துவர்கள்" ஒன்றிணைந்து... மக்களின் நலனுக்காக வெளியிட்ட 'கூல்' வீடியோ!
- '2025' வரை பல ஊழியர்களுக்கு "Work From Home" தான்!.. பிரபல 'ஐ.டி' நிறுவனம் 'அதிரடி' முடிவு?.. என்ன 'காரணம்' தெரியுமா?
- 'கொரோனாவை இப்படித்தான் சிறப்பா விரட்டியடித்தோம்'... ‘இப்போ ஜெயிச்சிட்டோம்’... ‘நள்ளிரவு முதல் லாக் டவுனை தளர்த்தும் பெண் பிரதமர்’!
- "யாரா இருந்தா என்ன.. வெளில வர்லாமா?".. 'ஊரடங்கில்' சொகுசு காரில் 'சிக்கிய' தொழிலதிபர் 'மகனுக்கு' தோப்புக்கரண 'தண்டனை'!
- 'ஊரடங்கில்' பொழுது போக... மனைவி கொடுத்த 'ஐடியா'... விளையாட்டு வினையாகி 'கடைசியில்' நேர்ந்த 'துயரம்'...
- மே 3க்குப் பிறகு என்ன செய்யலாம்?.. ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? நீக்கப்படுமா?.. பிரதமருடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெளியான 'முக்கிய' தகவல்!
- 'இரண்டு மாதத்திற்குப் பிறகு... ‘மே 4-ல் இருந்து... ‘லாக் டவுனை நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாடு’!
- "இது என்ன தோட்டா தரணி போட்ட செட்டா?..." 'பூக்கள் நிறைந்து ரம்மியமாகக் காட்சியளிக்கும் சென்னை...' 'கொரோனா கொடுத்த கிஃப்ட்...' 'சென்னையை சும்மா விட்டாலே அழகுதான்...'
- "ஊரடங்கை நீட்டிக்கணும்"... விருப்பம் தெரிவித்த 'ஆறு' மாநிலங்கள்... 'தமிழக' அரசின் நிலைப்பாடு என்ன?
- “முட்டைகோஸ்களை விற்பனை செய்யவே கஷ்டமா இருக்கு!”.. 'வருத்தமாக ட்வீட் போட்ட சத்தியமங்கலம் விவசாயி!'.. நெகிழவைத்த கர்நாடக எம்.பி!