டீச்சரும், 10-ம் வகுப்பு மாணவனும் உயிருக்கு உயிரா 'லவ்' பண்ணி கல்யாணம்! ஆசிரியை மீது பாய்ந்த சட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அரியலூர் : பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனை திருமண செய்து கொண்ட ஆசிரியை போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டீச்சரும், 10-ம் வகுப்பு மாணவனும் உயிருக்கு உயிரா 'லவ்' பண்ணி கல்யாணம்! ஆசிரியை மீது பாய்ந்த சட்டம்!
Advertising
>
Advertising

அரியலூர் மாவட்டம், மழவராய நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவன் ஒருவர் தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அம்பாபூர் கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பயிற்சி ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

ariyalur Teacher arrested for marrying 10th std student

இந்நிலையில், பயிற்சி ஆசிரியருக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் இடையே பள்ளியில் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் ஒருகட்டத்தில் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் அரசல்புரசலாக  பள்ளி முழுவதும் பரவி அந்த மாணவனின் வீடு வரை சென்றுள்ளது.


ஆசிரியை மாணவன் காதல்

இவர்களின் காதலுக்கு மாணவனின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் இதையும் மீறி 10ஆம் வகுப்பு மாணவனும், ஆசிரியையும் காதலித்து வந்துள்ளனர். மேலும், கடந்த அக்டோபர் மாதம் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகிலிருக்கும் மூங்கில் பாடி கிராமத்தில் அந்த மாணவனின் உறவினர் வீட்டுக்கு இருவரும் சென்றிருக்கின்றனர்.

கோயிலில் திருமணம்

அப்போது வீட்டில் யாரும்  இல்லாததால், இருவரும் அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமண விவகாரமும் மாணவனின் வீட்டாருக்குத் தெரிந்து பெரிய பிரளயமே ஏற்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சி

தங்களின் இருவரின் காதலை பெற்றோர்கள் ஏற்று கொள்ளாததால் மன உளைச்சல் அடைந்த மாணவனுன், ஆசிரியையும் மனமுடைந்து விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கின்றனர். இருவரும் மயங்கி கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் சிறுவனையும், அந்த ஆசிரியயையும் மீட்டு குன்னம் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதித்திருக்கின்றனர்.

உயிருக்கு ஆபத்து

ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சை பெற்றபின்னர் அந்த ஆசிரியை உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்ததால், உயர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவனின் குடும்பத்தினர் குன்னம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

போக்ஸோ சட்டம்

பெற்றோர் அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த ஆசிரியையை விசாரணை நடத்தி வந்தனர். இரண்டு மாதமாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தநிலையில், தற்போது அந்த ஆசிரியை மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்திருக்கிறார்கள்.

ஆசிரியை கைது ஏன்?

போக்சோ சட்டத்தில் பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் குறித்து வழக்கை விசாரித்து வரும் குன்னம் போலீஸார் கூறும் போது, 'சம்மந்தப்பட்ட ஆசிரியையும் மாணவனும் பல மாதங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வீட்டாருக்கு தெரியாமல் கடந்த அக்டோபர் மாதத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்கள்.

மாணவனுக்குக் குறைந்த வயது என்பதால் அவர் பெற்றோர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அந்த பெண் ஆசிரியர் தான் மாணவனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளும் படி வற்புறுத்தியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனால் தான் ஆசிரியையை போக்சோ சட்டத்தில் கைது செய்தோம்' எனக் கூறியுள்ளனர்.

ARIYALUR, TEACHER, MARRYING, 10TH STD, STUDENT, LOVE, MARRIAGE, போக்ஸோ, மாணவன், ஆசிரியர், காதல், திருமணம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்