'சொத்த என் பேருல எழுதி தர முடியுமா? முடியாதா?'.. ஆத்திரத்தில் மருமகள்... மாமனார் மீது வெறிச்செயல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரியலூரில் சொத்தை தனது பெயரில் எழுதிக் கொடுக்க மறுத்த மாமனாரை அடித்துக் கொலை செய்த மருமகள் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள காவேரி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி. இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ராமலிங்கம் கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டார். இதனால் தங்கசாமி தனக்கு சொந்தமான நிலத்தில் இரண்டு ஏக்கரை ராமலிங்கத்தின் மனைவி ராணிக்கு பாகம் பிரித்து கொடுத்துவிட்டார்.
தனக்கு வழங்கிய நிலத்தினை தனது பெயரில் பெயர் மாற்றம் செய்து தரக்கோரி மாமனார் தங்கசாமியிடம் மருமகள் ராணி தொடர்ந்து கேட்டுவந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கந்தசாமி கொட்டகையில் படுத்திருந்தபோது அங்கு வந்த மருமகள் ராணி, அருகிலிருந்த கட்டையை எடுத்து அவரை தாக்கியுள்ளார்.
இதில் பலத்த காயமடைந்த தங்கசாமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த செந்துறை போலீசார், ராணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் 'கல்லூரி' மாணவர் வெட்டிக்கொலை... தப்பி ஓடிய 7 பேர் 'கும்பலுக்கு' வலைவீச்சு!
- ’சானிடைசர் அடிக்க தான் வந்தாரு... ஆனா, அவர் இப்படி பண்ணுவாரு நினைக்கல...’ - தனியா இருந்த ‘மன நலம்’ பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நடந்த கொடூரம்!
- 'ராசாத்தி சின்ன சூட்டை கூட தாங்க மாட்டாளே'... 'எப்படி துடிச்சிருப்பா'... 'சிறுமிக்கு நடந்த கொடூரம்'... பின்னணியில் இருப்பது யார்?
- ’அம்மாவை இழந்த ’15 வயது சிறுமி’... தந்தையும், தாத்தாவும் செய்த வெறிச்செயல்...!’ - தமிழக சிறுமியின் அதிர்ச்சி வாக்குமூலம்!
- VIDEO: 'புயல் வேகத்தில் வந்து, பெண்ணை அடித்து வீசி... உடல்மீது ஏறி இறங்கிய கார்!' - பதறவைக்கும் 'வைரல்' வீடியோ!
- ’டெட் பாடி’யோட உடலுறவு...! - பொம்மை வாங்க போன எடத்துல சண்டை...' ‘கழுத்தறுத்து கொன்னு... 'பிக் அப்' வேன்ல போட்டுட்டு ஆள் எஸ்கேப்...!
- மறுக்கப்பட்ட நியூஸ் பேப்பர்...இரவு முழுக்க 'நோ' தூக்கம்... தனித்தனி பிளாக்கால் 'அப்செட்' ஆன இன்ஸ்பெக்டர்!
- 'ரகசிய' தகவலால் இறுகிய பிடி... தலைமறைவான காவலர் 'முத்துராஜை'... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிபிசிஐடி போலீசார்!
- VIDEO: ஜெயராஜ்-பென்னிக்ஸ் கடை முன்பு 'உண்மையில்' என்ன நடந்தது?.. Behindwoods நேரடி கள ஆய்வு!.. வெளியான அதிர்ச்சி தகவல்!
- 'ஆட்டம்', பாட்டம்ன்னு இருந்த 'கல்யாண' வீட்ல... திடீர்னு கேட்ட 'துப்பாக்கி வெடி' சத்தம்...! சுருண்டு விழுந்த 'மணப்பெண்'! - அதிர்ச்சியில் 'உறைந்த' உறவினர்கள்!