"எல்லாம் பசங்களுக்காக தான்".. 12 வருசமா அரசு பள்ளி ஆசிரியர் செய்து வரும் அசத்தலான காரியம்.. குவியும் பாராட்டு!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி மாணவர்களுக்காக கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் செய்து வரும் விஷயம் தற்போது பலரையும் மனம் நெகிழ வைத்துள்ளது.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

Also Read | "மொதல்ல இத Delete பண்ணுங்கப்பா".. ரசிகர் கேட்ட கேள்வி.. தினேஷ் கார்த்திக் கொடுத்த வைரல் ரியாக்ஷன்!!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் தா. பழூர் அருகேயுள்ள கீழ சிந்தாமணி என்னும் கிராமத்தைச் சேர்ந்த கலையரசன் என்பவர் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் இதற்கு முன்பு காட்டுமன்னார்குடியை அடுத்த ஓமம்புளியூர் அரசு பள்ளியிலும், சிலால் அரசு உயர்நிலை பள்ளியிலும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி பின் பணி மாறுதல் பெற்று காரைக்குறிச்சி உயர்நிலைப் பள்ளியிலும் பணிக்கு சேர்ந்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் இந்த பள்ளியில் அவர் பணியாற்றி வரும் சூழலில் மொத்தம் 12 ஆண்டுகளாக ஒருமுறை கூட விடுப்பின்றி பள்ளியில் ஆசியராக அவர் பணியாற்றி வருவது தான் தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

காலையில் 9:00 மணிக்கு பள்ளிக்கு வந்து மாணவர்களை ஒழுங்குப்படுத்தி வகுப்பை தொடங்குவதற்கு முன்பாகவே அவர்களுக்கு பாடம் தொடர்பாக கற்றுக் கொடுப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார். ஆசிரியர் கலையரசன் குறித்து பேசும் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன், 12 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் அவர் பணியாற்றி வருவதாகவும், பல்வேறு வேலையிலும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்து மாணவர்களை ஊக்குவித்து முன்மாதிரியாகவும் கலையரசன் திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அது மட்டுமில்லாமல், அரசு விடுமுறை நாட்களில் கூட அரசு சார்பில் பள்ளிக்கு வரும் இலவச திட்டங்களை வாங்கி வைத்து அதை மாணவர்களுக்கு முன்னின்று பகிர்ந்து அளிப்பதையும் கலையரசன் வழக்கமாக கொண்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல இந்த பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதாகவும் இதற்கு காரணம் அங்குள்ள ஆசிரியர்கள் சிறப்பான முறையில் கல்வி கற்பது தான் என்றும் தகவல்கள் கூறுகின்றது.

Also Read | "இந்தியாலயும் நிலநடுக்கம் இருக்குமா?".. துருக்கி பூகம்பத்தை முன்பே கணிச்ச நிபுணர் சொன்ன பரபர தகவல்!!

ARIYALUR, ARIYALUR GOVT SCHOOL, TEACHER, STUDENTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்