ஓடிக்கொண்டிருந்த அரசுப் பேருந்தை... நடுரோட்டில் தடுத்து நிறுத்தி... அதிரடியாக ஜப்தி!.. பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விபத்து வழக்கில் உரிய இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்து கழக மிதவை பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் பயணிகள் கொட்டும் மழையில் தவித்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த தழுதாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன். கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்து மோதியதில் கொளஞ்சிநாதன் இறந்து போனார்.
இதுதொடர்பான வழக்கில் ரூ. 9 லட்சத்து 92 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு அரியலூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இழப்பீடு தொகை இன்றுவரை வழங்கப்படவில்லை. இதனால், கொளஞ்சிநாதன் குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாடினர்.
இதையடுத்து , அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து, கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த மிதவை பேருந்தை நேற்று மாலை ஜெயங்கொண்டம் நால்ரோடு பகுதியில் நீதிமன்ற அமீனா வழிமறித்து நிறுத்தினார்.
பின்னர், பேருந்து ஜப்தி செய்யப்படுவதற்கான நோட்டீசை கண்ணாடியில் ஒட்டினார். அப்போது பேருந்தில் இருந்த 35 பயணிகள் மழை நேரத்தில் ஜப்தி செய்யப் படுவது குறித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி , ஜப்தி செய்யப்படுவதாக கூறிய ஊழியர்கள் கூறி பேருந்தை ஓரங்கட்டுமாறு கூறினர். இதையடுத்து, பேருந்து ஓரங்கட்டப்பட்டு பயணிகள் அனைவரும் கொட்டுத் மழையில் இறக்கி விடப்பட்டனர்.
பிறகு, மற்றொரு அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.ஜப்தி செய்யப்பட்ட பேருந்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
கொட்டும் மழையில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் ஜெயங்கொண்டம் நால்ரோடு பகுதியில் பரபரப்பான ஏற்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இனிமேல் ரூம் தேடி அலைய தேவையில்ல...' 'ஹாயா பஸ்லயே படுத்துக்கலாம்...' 'ஒரு நாளைக்கு ரூ.100 வாடகை...' - மூணாறில் கலக்கும் லாட்ஜ் பஸ்...!
- நள்ளிரவு வங்கியில் அடித்த ‘அலாரம்’.. பதறியடித்து ஓடி வந்த மக்கள்.. அரியலூர் அருகே பரபரப்பு..!
- ‘நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’... ‘இந்த ரயில்கள் மட்டும் ரத்து’... ‘7 மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பேருந்து நிறுத்தம்’... ‘புயல் கடக்கும்போது மட்டும் மின் துண்டிப்பு’...!!!
- ‘நாளை முதல்’... ‘சென்னை புறநகர் ரயில்களில்'... ‘குறிப்பிட்ட நேரங்களில் மட்டும்’... ‘இவங்களும் பயணிக்கலாம்’... ‘தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு’...!!!
- Video: 'தவ்ளூண்டு ஆங்கர் தாண்டா கப்பலையே நிறுத்துது...' 'எனக்கு பயம் இல்ல...' - பஸ் முன்னாடி மப்புல செய்த அட்ராசிட்டி...!
- என்ன பண்றேன்னு எனக்கே தெரியல சார்...! கவர்மெண்ட் பஸ்ஸ ஆட்டைய போட நெனச்ச நபர்... - 'பைக்ல விரட்டி போய் வண்டி மூவிங்லையே 'த்ரில்' சேஸ்...!
- ‘திடீரென ஆம்னி பேருந்துக்கு நேர்ந்த கதி’.. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- ‘தீபாவளிக்கு சொந்த ஊர் பயணம்’... ‘சென்னையில் இருந்து மட்டும் இவ்வளவு பேரா???’... வெளியான தகவல்..!!!
- ‘பல்சர் பைக்கில் வந்த வாலிபருக்கு நேர்ந்த சோகம்!’.. விபத்துக்குள்ளான பைக் மீது மோதிய அரசுப்பேருந்தால் ‘அடுத்து’ நடந்த பதறவைக்கும் சம்பவம்!
- ‘கொரோனாவால் 6 மாதம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த... ‘அதிமுக்கியமான’ சேவை சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் நாளை தொடக்கம்!