‘காந்தாரா’ புகழ் பூத கோலா நடனம் ஆடிக்கொண்டே சரிந்துவிழுந்து நடனக்கலைஞர் மரணம்.!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலைகளுள் ஒன்றுதான் பூத கோலா. கர்நாடக மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் இந்த பூத ஆராதனா நிகழ்ச்சியை சடங்காக செய்து மக்கள் வழிபடுவது வழக்கம்.

Advertising
>
Advertising

சமீபத்தில் கூட, கன்னடத்தில் வெளியாகி இந்திய ரசிகர்களை ஏகோபித்தமாக கவர்ந்த திரைப்படம் காந்தாரா. பெரும் பாராட்டுகளை குவித்த இப்படத்தினை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்தார். இதில் காண்பிக்கப்பட்ட மரபான கலாச்சார சடங்கு மற்றும் ஆன்மீக நிகழ்வுகள் இறுதிக் காட்சிகளிலும், தொடக்க காட்சிகளிலும் இடம்பெற்ற பஞ்சுருளி கடவுள் தொடர்பான காட்சிகள் அனைத்தும் மிரளவைத்தன.

விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பட்டையை கிளப்பிய இந்த படத்தின் இறுதி காட்சியில் வரும் கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலையான பூத கோலா நடனம் பலருக்கும் புதுமையாக இருந்தது. 

இந்த நிலையில்தான், கர்நாடக மாநிலம் தக்ஷினா கன்னடா மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆன்மீக கலை நிகழ்ச்சியில் பூத கோலா நடனம் ஆடிக் கொண்டிருந்த நடன கலைஞர் ஆடுக்கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்தார். அதை கண்டதும் அதிர்ச்சியடைந்த சுற்றியிருந்தவர்கள், உடனடியாக அவர் அருகே ஓடுகின்றனர்.

பின்னர் மருத்துவர்களுக்கு தகவல் அளித்ததன் பேரில், விரைந்து வந்த மருத்துவர்கள் கந்து அஜிலா என்கிற அந்த கலைஞர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக குறிப்பிட்டனர்.  இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

KANTARA, KARNATANA, KANTARA DANCE, POOTHA KOLA, KOLA DANCE, PANJURULI, RISHAB SHETTY, KANTARA BHOOTA KOLA DANCE

மற்ற செய்திகள்