ARIIA Ranking: நாட்டிலேயே ஐஐடி மெட்ராஸ் கல்வி நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்தியாவில் மிகவும் புத்தாக்கம் நிறைந்த கல்வி நிறுவனம் ஆகத் தொடர்ந்து 3-வது முறையாக முதலிடம் பிடித்து அசத்தி உள்ளது ஐஐடி மெட்ராஸ்.
இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் சார்பில் புத்தாக்க சாதனைகளுக்கான கல்வி நிறுவனங்களில் தரவரிசைப் பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் இந்தத் தர வரிசையில் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்கள்/ பல்கலைக்கழகம் என்ற பிரிவில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு 1,438 உயர் கல்வி நிறுவனங்கள் ARIIA தரவரிசைக்கான பதிப்பில் பங்கேற்றன. இதன் தரவரிசைப் பட்டியல் முடிவுகளை மத்திய கல்வித்துறை அமைச்சர் சுபாஸ் சர்க்கார் வெளியிட்டார். ARIRA மூலம் நமது நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களை சர்வதேச தரவரிசைப் பட்டியலுக்கு தயார்படுத்த உதவும்.
இந்தத் தரவரிசைப் பட்டியலின் நோக்கம் குறித்து சுபாஸ் சர்க்கார் கூறுகையில், “கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உயர் தர ஆராய்ச்சி, புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றை ஊக்குவிக்க, மறுசீரமைக்க சிறந்த சுற்றுச்சூழலை உருவாக்குவதே ARIIA பணி. இந்தத் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக ஐஐடி மெட்ராஸ் முதலிடம் பிடித்துள்ளது.
ஐஐடி மெட்ராஸ் தனது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே புத்தாக்கங்களுக்கான முக்கியத்துவத்தை கொண்டு சேர்க்கிறது. இதன் காரணமாக தொழில்நுட்ப உலகின் சிறந்தோர்களை உருவாக்கும் சூழல் கிடைக்கும்” எனப் பேசினார்.
மற்ற செய்திகள்
திரைப்படங்களை மிஞ்சும் அரசு ஆவணப்படம் - திருநெல்வேலி பூர்வகுடிகளுக்காக தமிழக அரசின் சிறப்பு வெளியீடு
தொடர்புடைய செய்திகள்
- என்னால அந்த வீட்ல வந்து 'வாழ' முடியாதுங்க...! 'வெளியே நின்னுட்டு இருந்த ஸ்கூட்டி...' - உச்சக்கட்ட கடுப்பில் கணவன் செய்த காரியம்...!
- சென்னையில் நடந்த முக்கியமான மாற்றம்.. 2017 to 2022.. வீதிகளும்.. வீடுகளும்!
- இன்ஸ்டா, பேஸ்புக்ல 'ஃபோட்டோ' போடுற பொண்ணுங்க தான் டார்கெட்...! - 'போலி விளம்பரம்' செய்து இளம்பெண்களை மோசடி செய்த நபர்...!
- மாணவ வலிமை இதுதான்! 36 வயதினிலே.. சிலே நாட்டின் அதிபர்.. கேப்ரியல் போரிக் யார்?
- கத்திப்பாரா நகர்ப்புறச் சதுக்கம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. சிறப்புகள் விவரம்!
- திடீரென உள்வாங்கிய கடல்... சென்னை மெரினா கடற்கரையில் பதற்றம்!
- நீதி வேண்டும், நியாயம் வேண்டும்...! 'பல தடவ கேட்டுப் பார்த்தாச்சு...' 'ரெஸ்பான்ஸ் இல்ல...' - அப்பாவிற்கு எதிராக 'போராட்டத்தை' தொடங்கியுள்ள மகன்...!
- 'பொதுக் கழிப்பிடத்துக்குள் இருந்து வந்த இளைஞரின் குரல்!'.. கதவை உடைத்து மீட்டதும் 'சிரித்துக் கொண்டே வெளிவந்த நபர்'.. நடந்த சம்பவம் இதுதான்!
- 'ஆண் மாணவர்கள் அதிக பெண் தன்மையுடன் இருக்காங்க'... 'விவாதத்தை கிளப்பிய சுற்றறிக்கை'... கொந்தளித்த நெட்டிசன்கள்!
- ‘டெப்போவுல நிறுத்தி வெச்சது குத்தமாயா?’.. ‘MTC பேருந்தையே ஆட்டையப் போடப் பார்த்த மர்ம நபர்!’.. சென்னை மாநகரில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!