'ஆத்தாடி' ... 'அப்போலோ'க்கு இவ்வளோ கடனா'?... முக்கிய முடிவெடுத்த அப்போலோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடன் சுமை அதிகரித்து வருவதால் சொத்துக்களை விற்க அப்போலோ நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மருத்துவமனையான அப்போலோ இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளை கொண்டுள்ளது. தற்போது நிறுவனங்கள் சார்ந்த கடன் பிரச்சனையில் அப்போலோ சிக்கியுள்ளதால், அது சார்ந்த சொத்துக்களை விற்க அப்போலோ முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பேசிய அப்போலோவின் நிர்வாக இயக்குநர் சுனீதா ரெட்டி ''அப்போலோவிற்கு கடன் கொடுத்த நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனத்தின் பங்குகளை அடமானமாக வைத்துள்ளோம். தற்போது அடமானத்தில் இருக்கும் 78 சதவீத பங்குகளை 20 சதவீதமாக குறைக்க முயற்சி முயற்சித்து வருகிறோம். இதுதொடர்பாக பல முதலீட்டாளர்கள் எங்களை சந்தித்து பேசி வருகிறார்கள்'' என கூறினார்.

இதனிடையே சொத்துக்களை விற்பதன் மூலம் தற்போது இருக்கும் கடன் தொகையான ரூ.3000 கோடியை இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.2500 கோடியாக குறைக்க அப்போலோ திட்டமிட்டுள்ளது. இதற்காக 13 செவிலியர் கல்லூரிகள் மற்றும் 2 மருத்துவக் கல்லூரிகளை விற்க அப்போலோ முடிவு செய்துள்ளது. மேலும் இதற்கு தேவையான நிதியினை திரட்ட இந்த மாத இறுதிக்குள் சில ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக அப்போலோ மற்றும் முனிச் ரீ குழுமம் இணைந்து நடத்தி வந்த, மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்தின் பங்குகளை ஹச்டிஎஃப்சி நிறுவனத்திடம்  கடந்த மாதம் அப்போலோ விற்றது குறிப்பிடத்தக்கது.

APOLLOHOSPITAL, ASSETS, DEBT, REDDY FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்