'காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு...' 'மொத்தம் 21 இடங்களில்...' - முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் 'லஞ்ச ஒழிப்பு' போலீசார் 'அதிரடி' சோதனை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் விஜய பாஸ்கர். தற்போது கரூரில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் விஜயபாஸ்கரின் வீடு, சாயப்பட்டறை போன்ற 21 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.
இந்த திடீர் சோதனை குறித்து அறிந்த அதிமுக நிர்வாகிகள் தற்போது விஜயபாஸ்கரின் வீட்டின் வெளியே கூடி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய ஆவணங்களை சமர்பித்துவிட்டு சோதனை செய்யுமாறு அதிமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
அதிமுக ஆட்சியில் விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடத்தப்படுவதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், சென்னையில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: என்னதான் ‘Photoshoot’-அ இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா.. கல்யாணம் ஆன அடுத்த நாளே மணப்பெண்ணுக்கு வந்த ‘அதிர்ச்சி’ தகவல்..!
- ‘உங்க செல்போன் ID-ஐ ஹேக் செஞ்சிட்டோம்’!.. வசமாக சிக்கிய 5 பெண்கள் உட்பட 26 பேர் கொண்ட கும்பல்.. அமேசான் பெயரில் அதிரவைத்த மோசடி..!
- 'மக்களே ‘Wifi ATM Card' வச்சிருக்கீங்களா, அப்போ உஷார்'.. 'நூதன முறையில் மோசடி'... சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- பப்ஜி மதனுக்கு இறுகும் பிடி!.. தமிழ்நாடு போலீஸ் மாஸ்டர் ஸ்ட்ரோக்!.. சென்னை காவல் ஆணையர் அதிரடி உத்தரவு!
- டிராஃபிக் சிக்னலில்... ரெட் லைட்டை தாண்டினால்... சில விநாடிகளிலேயே வேட்டு!.. காவல்துறை அதிரடி திட்டம்!
- பதவிக்கு வந்த முதல் நாளே... அதிரடி காட்டிய டிஜிபி சைலேந்திர பாபு!.. கடுமையான சவால்!.. தரமான சம்பவம்!
- 'நீங்களே பாருங்க, எங்க செயல்பாடு பேசும்'... 'தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவியேற்றார் 'சைலேந்திர பாபு ஐபிஎஸ்'!
- 'தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமனம்'... தமிழக அரசு அறிவிப்பு!
- 'இந்த பொண்ண ஞாபகம் இருக்கா'... 'போலீஸ் உடையில் பார்த்ததும் வாயடைத்து போன உறவினர்கள்'... வாழ்க்கையை புரட்டி போட்ட அதிரடி சம்பவம்!
- 'தொடர்ந்து அவதூறு மற்றும் ஆபாச விமர்சனம்'... 'கிஷோர் கே.சாமி மீது குண்டாஸ்'... காவல்துறை அதிரடி!