'வீட்டுல இருந்து காலேஜ்க்கு போன பொண்ண'...'கடத்திட்டு போய்'... மீண்டும் அரங்கேறிய அவலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்து மாணவி கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் இந்து, சீக்கிய, கிறிஸ்தவ பெண்கள் கடத்தப்பட்டுக் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும், சமீப காலமாக இது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன், சீக்கிய பெண் ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்தபின், இஸ்லாமிய இளைஞருக்கு திருமணம் செய்து கொடுக்கப் பட்டார். இது பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது.

இந்த சூழ்நிலையில்  சீக்கிய பெண் மதமாற்றம் செய்யப்பட்ட பிரச்சனை ஓய்வதற்குள் மீண்டும், இந்து மாணவி ஒருவர் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் சுக்கூர் மாவட்டத்தில் உள்ள ரோஹாரியை சேர்ந்த கல்லூரி மாணவி ரேணு குமாரி. இவர் கடந்த மாதம் 29 ஆம் தேதி கல்லூரி செல்வவதற்காக வீட்டிலிருந்து கிளம்பியுள்ளார். ஆனால் அவர் மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை.

இந்நிலையில் கல்லூரி மாணவி ரேணு கடத்தப்பட்டு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, அனைத்து பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் நடந்த சம்பவம் தொடர்பாக பேசிய ரேணுவின் சகோதரர் ''எனது சகோதரி ரேணு, உடன் படிக்கும் பாபர் அமன் என்பவருடன் பழகி வந்தார். அவர்தான் ரேணுவை கடத்தி கட்டாய மதமாற்றம் செய்துள்ளார். இது தொடர்பாக புகார் கொடுத்திருக்கிறோம்’ என்றார்.

இதனிடையே புகாரை பெற்று கொண்ட காவல்துறையினர் அமனின் சகோதரரை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ரோஹாரியில் சமீபத்தில் நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்று பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.ரோஹாரியில் சமீபத்தில் நடந்துள்ள மூன்றாவது சம்பவம் இது என்று பாகிஸ்தான் இந்து பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.

PAKISTAN, ISLAM, ABDUCTED, CONVERTED TO ISLAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்