'இளைஞர்களே'...'வந்தாச்சு '2020' ஆண்டுக்கான 'TNPSC' தேர்வு அட்டவணை'...மொத்தம் 23 எக்ஸாம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

Tamil Nadu Public Service Commission எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 2020 ஆம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த 2020 ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வு எப்போது நடைபெறும், எந்த மாதம் நடைபெறும் என்பது குறித்த தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. http://www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேர்வு அட்டவணையை காணலாம். அதன்படி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் அதற்கேற்ப முன் தயாரிப்புகளில் ஈடுபட அட்டவணை உதவியாக இருக்கலாம்.

ஜனவரி மாதம் மொத்தம் நான்கு டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற உள்ளதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குரூப் 1 தேர்வு (Group-I Services), வேளாண் அதிகாரி பணிக்கான தேர்வு Agricultural Officer (Extension) , தோட்டக்கலை உதவி இயக்குநர் மற்றும் தோட்டக்கலை அலுவலர் பணிக்கான தேர்வுகள் நடைபெறுகிறது. இதே போல், தோட்டக்கலை சார்நிலை பணிகள் -உதவி அலுவலர் பணிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வும் நடைபெறுகிறது

பிப்ரவரி மாதத்தில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பல்வேறு துறை பதவிகளுக்கான தேர்வு மட்டும் நடைபெறுகிறது. மார்ச் மாதத்தில் 3 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் உள்ளது. அவை. 1. ஒருங்கிணைந்த நூலக மற்றும் தகவல் சேவைக்கான தேர்வு, 2. மீன்வளத்துறை ஆய்வாளர் மற்றும் மீன்வளத்துறை உ.தவி இயக்குநர் பதவிக்கான டி.என்.பி.எஸ்.சி தேர்வு, 3. பர்சர் பணிக்கான தேர்வு (Bursar In Tamil Nadu Collegiate Educational Service) ஆகியவை நடைபெறுகிறது.

மேலும் மே மாதத்தில் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிக்கான தேர்வு நடைபெறுகிறது. எனவே, குரூப் 2 தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள், அதற்கு ஏற்றாற்போல தயாராகி கொள்ளலாம். ஒட்டு மொத்தமாக வரும் 2020 ஆண்டில் மட்டும் 23 டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி இணையதளம் www.tnpsc.gov.in பக்கத்தில் தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

EXAM, TNPSC, ANNUAL PLANNER 2020

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்