சென்னை போலீஸ் கமிஷ்னர் ஆபிசுக்கு பறந்த அன்னப்பூரணி.. கொடுத்த பரபரப்பு புகார்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட பெண் அன்னப்பூரணி சாமியார் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

தனது நற்பெயரை களங்கப்படுத்தும் விதமாக சில யூடியூப் சேனல்கள் சமூக வலைதளங்களில் அவதூறு தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது எனவே உடனடியாக அவற்றை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
கணவர் மரணம்:
மேலும், என் கணவர் அரசு மர்மமான முறையில் இறந்ததாக கூறிக்கொண்டே இருக்கிறார்கள். அவரது பிரேத பரிசோதனை அறிக்கை கூட என்னிடம் உள்ளது. அதை நான் வழங்க வேண்டிய இடத்தில் வழங்குவேன். இது தெரியாமல், என் மீது பழி போடுகிறீர்கள். இதோடு அனைத்தையும் நிறுத்திவிடுங்கள். இனி ஆதிபராசக்தி என்ற பெயரை பயன்படுத்தமாட்டேன். அம்மா என்ற பெயரை மட்டுமே பயன்படுத்துவேன் என கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ரத்து:
1 ம் தேதி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டேன். எந்த வழக்கும் என் மீது இல்லை. இனி நடத்துவதாக இருந்தால், முறையாக அனுமதி பெற்று நடத்துவேன். எனக்கு மிக மோசமான வாட்ஸ்ஆப் எல்லாம் வருகிறது. நான் தலைமறைவாக இல்லை. என்னை யாரும் தேடவில்லை. செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கு நான் போன் செய்து தெளிவுபடுத்திவிட்டேன்.
போனில் கொலைமிரட்டல்:
அதுமட்டுமல்லாமல் தனது ஆன்மீக சேவையை தடுக்கும் விதமாக சில நபர்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் போனில் தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் கூறியுள்ளார்.
நான் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல கார் வைத்திருக்கிறேன். தங்க வீடு வைத்திருக்கிறேன். இதெல்லாம் ஆடம்பரமா? நான் ஏதோ கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க இங்கு வரவில்லை. என்னுடைய வேலையை செய்ய தான் இங்கு வந்துள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்து அமைப்புகள் புகார்:
எந்த நேரத்திலும் அச்சுறுத்தல் ஆபத்து இருக்கலாம் எனவே அதனை உடனேயே தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மதநம்பிக்கை இழிவுபடுத்தும் விதமாக ஐந்து இந்து அமைப்புகள் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர்கள் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். அந்த மனுவை சட்ட வல்லுனர்களிடம் ஆலோசித்து அந்த மனுவை எடுப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்