VIDEO: உங்க பெயரு, வேலை எதுவுமே 'நீங்க' கெடையாது...! 'எது' உங்கள இயக்குது...? - அன்னபூரணியுடன் அனல் பறந்த விவாதம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த மூன்று தினங்களாக இணையதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருபவர் ஈரோட்டை சேர்ந்த அன்னபூரணி அரசு அம்மா.

VIDEO: உங்க பெயரு, வேலை எதுவுமே 'நீங்க' கெடையாது...! 'எது' உங்கள இயக்குது...? - அன்னபூரணியுடன் அனல் பறந்த விவாதம்...!
Advertising
>
Advertising

விசேஷ சக்தி

இவர் தன்னிடம் ஒரு சக்தி இருப்பதாக கூறிக்கொள்ளும் இவரை நிறைய பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். குழந்தைகள் என இவர் சொல்லும் பக்தர்கள் அன்னபூரணியின் பாதங்களில் பூப்போட்டு வழிபடுவது காலில் விழுந்து அழுது கதறுவது என சடங்குகளை செய்து வந்துள்ளனர்.

sa shaun pollock criticized Virat Kohli's performance

இரண்டு வீடியோக்கள்

அண்மையில் நடந்த ஆன்மீக கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாக பரவி மக்களிடையே விமர்சனங்களையும் சலசலப்பையும் உருவாக்கியது. அது மட்டுமில்லாமல் கடந்த 2013-ஆம் ஆண்டு சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் இவர் பங்கேற்ற வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியானது.

அதற்குப் பிறகு தான் அருள்வாக்கு சொல்லும் ஒரு சாமியாராக உருவெடுத்தது தெரிய வந்தது. இந்த இரு வீடியோக்களும் ஒருசேர வைரலாகவே தமிழகம் முழுவதும் பரபரப்பு உருவானது. மேலும் புத்தாண்டு தினத்தில் அரசு நடைமுறையை மீறி கூட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானதால் அதற்கும் தடை விதிக்கப்பட்டது.

நேர்காணல் 

இந்த நிலையில் நேற்றைய தினம் behindwoods சேனலுக்கு அளித்த நேர்காணலில் சர்ச்சைகள் குறித்தும், அவரது நிலைபாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது பொதுவெளிக்கு வந்த அவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கேள்வி கேட்டபோது பதிலளிக்காமல் திசை திருப்பினார். மேலும் தனக்கு சக்தி உள்ளது சாதாரண மனிதர்களால் உணர முடியாது என சத்தம் போட்டு மூச்சு வாங்கிக் கொண்டே சினத்தில் கொந்தளித்தார்.

எதுவுமே நீங்க கிடையாது

காரசாரமாக போய்க்கொண்டிருந்த விவாதத்தில், நெறியாளரிடம் நீங்கள் யார் உங்கள் பெயர் என்ன என்று கேட்டார். அப்போது தன் பெயரையும் இங்கு நெறியாளராக பணிபுரிவதையும் கூறினார். அப்போது இந்தப் பெயர், இந்த பணி எதுவுமே நீங்கள் கிடையாது உங்கள் அடையாளம் எதுவுமே நீங்கள் கிடையாது என்று கூறினார்.

உங்களை இயக்குவது என்று கேள்வி கேட்டபோது இயற்கையாக அனைத்தும் நடக்கிறது என்று பதில் அளித்தார். அப்போது, இதை நீங்கள் உணராத வரை என்னை புரிந்து கொள்ளவே முடியாது. அதுவரை இப்படி பேசிக் கொண்டிருக்க வேண்டியது தான் என மழுப்பலாகவே பதில் அளித்தார்.

ANNAPOORNI AMMA, அன்னபூரணி, INTERVIEW, BEHINDWOODS, நேர்காணல்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்