மொதல்ல 'இந்த விஷயத்த' பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணி 'எழுதி' கொடுங்க...! 'அப்போ தான் அட்மிஷன்...' - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ராகிங்-கில் ஈடுபட மாட்டேன் என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே அட்மிஷன் தரப்படும் என அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
இந்தியா முழுக்க உள்ள அனைத்துக் கல்லூரிகளிலும், ராகிங் என்பது ஒரு பெரிய பிரச்னையாக உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆகும். ராகிங் தொந்தரவு காரணமாக முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு சில மாணவ-மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்கதை ஆகி வருகிறது.
கல்லூரிகளில் ராகிங் என்பது அறவே ஒழிக்கப்பட வேண்டும் என அனைத்து பல்கலைக் கழகங்களும் கண்டிப்பாக கூறிய போதும் பல கல்லூரிகளில் ராகிங் தொடர்ந்து இருந்துக்கொண்டே இருக்கிறது வேதனைக்குரிய ஒன்று ஆகும். ராகிங்கை முழுவதுமாக ஒழிக்க பல்கலைக் கழகங்கள் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ராகிங்-கில் ஈடுபட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தால் மட்டுமே மாணவர்களுக்கு அட்மிஷன் என அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டு உள்ளது.
இது பற்றி அண்ணா பல்கலைக் கழகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
ராகிங்-கில் ஈடுபட மாட்டேன் என மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆன்லைனில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். www.antiragging.in என்ற இணையதளத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், www.amanmovement.org என்ற வெப்சைட்டிலும் தாக்கல் செய்யலாம்.
இந்த இரு இணையதளங்களில் ஒன்றில் தாக்கல் செய்து செய்து பல்கலைக் கழகம் சிறப்பு அலுவலருக்கு அனுப்ப வேண்டும். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் கீழ் இணைப்பு பெற்ற அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் இது பொருந்தும். என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'விதிமுறைகளை தளர்த்துறோம்...' இனிமேல் ஆன்லைன் எக்ஸாம்ல 'இதெல்லாம்' பண்ணலாம்...! - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு...!
- அரியர் போட்டு 30 வருஷம் ஆச்சா...? 'பரவாயில்லை, இன்னும் வாய்ப்புகள் இருக்கு...' - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலைகழகம்...!
- '12 லட்சம் முதல் 28 லட்சம் வரை சம்பளம்'... 'கொரோனா நேரத்தில் குஷியான மாணவர்கள்'... அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு!
- 'எங்களை டிரஸ் இல்லாம நிக்க வச்சு'...'அத போட்டோ எடுத்து'... கொடுமைகளை அனுபவித்த மாணவர்கள்!
- 'இங்க ஜீன்ஸ், டி-சர்ட் போட கூடாது'... 'தலை முடியை விரித்து விட கூடாது'... சென்னை கல்லூரியில் அதிரடி!