'கொரோனாவை கொல்லும் சானிடைசர்... ' கொரோனா வைரஸ ஒட்டுமொத்தமா ஒழிச்சு கட்டிடும்...' அசத்திய சென்னை மாணவர்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா வைரஸை முழுமையாக அழிக்கும் கிருமி நாசினியை கண்டுபிடித்து செயல்முறையில் கொண்டுவந்து சாதனைப் படைக்க உள்ளது சென்னை அண்ணா பல்கலைக்கழகம்.
கொரோனா வைரஸ் விஷயத்தில், கண்ணுக்கு தெரியாத ஒரு சிறு உயிரே தற்போது உலகையே ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த வைரஸ் பரவும் விகிதத்தை பார்த்து ஆராய்ச்சியாளர்களும், மருத்துவர்களும் ஸ்தம்பித்து போய் உள்ளனர். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் தந்திரமாக அனைத்து உலக நாடுகளும் கையிலெடுப்பது ஊரடங்கு உத்தரவை தான். ஊரடங்கை செயல்படுத்தாத நாடுகளில் தான் பலி எண்ணிக்கை அதிக அளவில் காணப்படுகிறது.
மேலும் இதுவரை சுமார் 2,331,950 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் சுமார் 15,723 பாதிப்படைந்து உள்ளனர்.
கொரோனா வைரசை நமக்கு பரவாமல் தடுக்க அனைத்து உலக நாடுகளும் அடிக்கடி கைகளை கழுவவும், முகப்பாகங்களில் கைகளை கொண்டு செல்லாமல் இருக்கவும் வலியுறுத்தி வருகிறது. அதே போல் வெளியே செல்லும் போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்யவும் அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.
ஆனால் இதுவரை நாம் பயன்படுத்தும் எல்லா கிருமி நாசினிகளும் கொரோனா வைரஸை முழுமையாக அழிக்குமா என்றால் அதற்கு பதில் இல்லை. வைரஸின் மேற்பகுதியை வலுவிழக்க செய்யும் கிருமி நாசினிகளையே நாம் பயன்படுத்தி வருகிறோம்.
தற்போது மக்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் அண்ணா பல்கலைக்கழகம் கொரோனா வைரஸை முற்றிலும் அழிக்கும் கிருமி நாசினியை கண்டுபிடித்துள்ளது. இதுவரை நாம் அனைவரும் பயன்படுத்தி வரும் கிருமி நாசியானது கொரோனா வைரஸின் மேல் பகுதியை மட்டும் செயலிழக்க செய்தும் தன்மை உடையது.
ஆனால் தற்போது நம் சென்னை அண்ணா பல்கலைக் கழகம் கண்டுபிடித்துள்ள புதிய கிருமிநாசினியானது, வைரஸின் முழு திறனையும் அழித்து, அதன் ஊடுருவலை தடுக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த கிருமிநாசினி கொண்டு மருத்துவர்கள் பயன்படுத்தும் பாதுகாப்பு கவசங்கள், உபகரணங்களை சுத்தம் செய்யலாம் எனவும், இந்த கண்டுபிடிப்பானது அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. மேலும் அரசோடு இழைந்து தற்போதைய தேவைகேற்ப அதிகளவில் உற்பத்தி செய்ய பெரிய நிறுவனங்களோடு கைகோர்த்து கொரோனா பரவலை தடுக்க ஆயத்தமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்