'12 லட்சம் முதல் 28 லட்சம் வரை சம்பளம்'... 'கொரோனா நேரத்தில் குஷியான மாணவர்கள்'... அண்ணா பல்கலைக்கழகத்தின் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களின் முதல் தேர்வாக எப்போதும் இருப்பது அண்ணா பல்கலைக்கழகம் தான். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி, குரோம்பேட்டை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கட்டடவியல் வடிவமைப்பு கல்வி நிலையம் ஆகியவை செயல்பட்டுவருகின்றன. இங்கு இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு வருடந்தோறும் வளாக நேர்காணல் நடத்தப்படுவது வழக்கம். இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும். அதில் பல மாணவர்கள் பல லட்ச சம்பளத்திற்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதன்காரணமாக வளாக நேர்காணல் நடத்த முடியாத சூழ்நிலை உருவானது. இது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இந்தச்சூழ்நிலையில் அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கான நடப்பு ஆண்டு வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ ) ஆன்லைன் மூலம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட நேர்காணல் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நேர்காணலில் கலந்துகொள்ள 3,300 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் பங்கேற்கும் 25 வெளிநாட்டு நிறுவனங்கள், ஆண்டுக்கு 12 லட்சம் முதல் 28 லட்சம் ரூபாய் வரை ஊதியம் கிடைக்கும் பணிகளை வழங்கவுள்ளன. இதனிடையே மீண்டும் நேர்காணல் தொடங்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்