அமைச்சரை தூக்கிச் சென்று... கரையில் இறக்கிவிட்ட மீனவர்!.. ஏன் அப்படி செய்தார்?.. செம்ம வைரல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை மீனவர் தூக்கிச் சென்று கரையில் இறக்கி விட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் உள்ள உப்பங்கழி ஏரியில், மண் அரிப்பு ஏற்படுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர், எம்.எல்.ஏக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, 7 பேர் பயணிக்கக்கூடிய படகில் அமைச்சருடன் 30க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஒரு புறமாக சாயத் தொடங்கியதால் படகிலிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
இதையடுத்து, அமைச்சர் பயணித்த படகில் இருந்த சிலரை வேறொரு படகில் ஏற்றினர். அதன் பின்னர் முகத்துவாரம் பகுதியில் ஆய்வை முடித்துக்கொண்டு படகில் இருந்து இறங்கிய அமைச்சரை, மீனவர் ஒருவர் இடுப்பில் தூக்கிச்சென்று கரையில் இறக்கிவிட்டார்.
இதுகுறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறுகையில், தண்ணீரில் இறங்கி நடக்கத் தயாராக இருந்ததாகவும், பாசமிகுதியால் தன்னை மீனவர் தூக்கிச்சென்று கரையில் இறக்கிவிட்டதாகவும் தெரிவித்தார். இதுவரை அந்தப் பகுதிக்கு ஆய்வுசெய்ய யாரும் வந்ததில்லை என மீனவர்கள் நன்றியுடன் கூறியதாகவும் அமைச்சர் கூறினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘தெருத்தெருவாக இழுத்து... நிர்வாணமாக்கி சித்ரவதை’!.. இலங்கை கடற்படையிடம் சிக்கி உயிர்பிழைத்த மீனவர் சொன்ன ‘பதபதைக்க’ வைக்கும் கொடுமை..!
- ‘விளையாடப்போன சிறுமி’... ‘2 நாள் கழித்து’... 'பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி'!
- 23 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான மீனவர்.. இலங்கையில் மனநல பாதிப்புடன் திரியும் பரிதாபம்.. உதவிய சமூக வலைதள சேனல்!
- கன்னியாகுமரியில் கடல் சீற்றம்.. ஊருக்குள் புகுந்த கடல்நீர்.. மீனவ கிராம மக்கள் அச்சம்!