“வலதுபுற மார்பகத்தையே அகற்றிட்டாங்க” .. 'அங்காடித் தெரு’ சிந்துவுக்கு இப்படி ஒரு கஷ்டமா.. கலங்க வைக்கும் பேட்டி! வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு.
இந்தப் படத்தில் மகேஷ், அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகை சிந்து ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அங்காடித் தெரு மட்டுமின்றி சில தமிழ் படங்களிலும் சிந்து நடித்துள்ளார். மேலும் சில சீரியல்களிலும் சிந்து நடித்துள்ளார்.
கடந்த 2020 ஆம் வருடம் மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை சிந்து, அப்போது ஒரு வீடியோவை வெளியிட்டு சிந்து புற்றுநோய் சிகிச்சைக்கு உதவி கேட்டிருந்தார். நடிகர்கள் சாய் தீனா, கார்த்திக், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ரோபோ ஷங்கர், ஶ்ரீ மன், ராகவா லாரன்ஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் சிந்துவுக்கு உதவிகள் செய்தனர்.
இந்நிலையில் நடிகை சிந்து நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தமது உடல்நிலை குறித்தும், தற்போது தான் எடுத்து வரும் சிகிச்சை குறித்தும், தமது குடும்பம் குறித்தும் பேசியுள்ளார். நடிகை சிந்து பேசியதாவது, "முதல்முறை புற்று நோயின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மீண்டு வந்தேன். கீமோ தெரபி சிகிச்சை பெற்று வந்தேன்.
ஆங்கில மருந்து செட் ஆகவில்லை. எனவே நாட்டு மருத்துவம் பக்கம் சென்றேன். 50% சரியானேன். குடும்ப சூழ்நிலை காரணமாக சென்னை வர வேண்டி இருந்தது. 48 நாள் சிகிச்சை 38 நாளில் திரும்ப வர வேண்டி இருந்தது. கீமோ தெரபி செய்து எனது கை நரம்புகள் செயலிழக்க ஆரம்பித்தன. வலது கை வீக்கம் ஏற்பட காரணம் என்னுடைய வலது புற மார்பகம் புற்றுநோய் காரணமாக அகற்றப்பட்டு விட்டது. அதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. அதனால் ஏற்பட்ட வீக்கம் இன்னும் உள்ளது. இதோடு தான் நான் போராடிக் கொண்டு உள்ளேன்.
கடந்த 2-3 ஆண்டுகள் என்னுடைய நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியால் சமாளித்து வந்தேன். சமீபத்தில் ஒரு சீரியலில் கமிட் ஆனேன். ஆனால் சில ஒவ்வாமை காரணமாக இந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளேன். என்னுடைய இன்னொரு பக்க மார்பகத்திலும் புற்றுநோய் பரவி உள்ளது. அறுவைச் சிகிச்சை முன் ஸ்கேன் எடுக்க வேண்டும். என்னுடைய வலி வேதனை யாருக்குமே தெரியாது. வாழ்க்கையே போராட்டமாக உள்ளது. வீட்டு வாடகை, சிகிச்சை, உணவு, என் குடும்பத்திலும் பிரச்சினை உள்ளது" என நடிகை சிந்து கண்ணீர் பேட்டி அளித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்... பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்.. உலக தலைவர்கள் இரங்கல்..!
- சிறுமியின் உயிரை காப்பாற்றிய வாட்ச்.. சரியான நேரத்துல கொடுத்த வார்னிங்.. செக் பண்ணப்போ தெரியவந்த அதிர்ச்சி..!
- புற்றுநோயால் இறந்தது டேவிட் மில்லர் மகளா? ரசிகையா? முழு தகவல் இதோ!
- கேன்சரால் பாதிக்கப்பட்ட காதலி.. "சிகிச்சை'ல இருந்தப்போ" ஆசையா கேட்ட விஷயம்.. களத்தில் இறங்கி அசத்திய காதலன்!!
- புற்றுநோய் மூலம் பாதிக்கப்பட்ட மனைவி.. புகைப்படத்தை பகிர்ந்து கணவர் போட்ட பதிவு.. "படிச்ச எல்லாருமே கண் கலங்கிட்டாங்க"
- 18 வருஷத்துக்கு முன்னாடி காணாம போனவர்.. லேடி கெட்டப்பில் வந்து சொன்ன விஷயம்.. நம்பிய மக்களுக்கு காத்திருந்த ஷாக்.!
- "எனக்கு கேன்சர் வந்துடுச்சு".. ஆன்லைனில் பணம் திரட்டிய பெண்.. ரூ.45 லட்சம் சேர்ந்த உடனே சுயரூபத்தை காட்டியதால் கொதித்துப்போன மக்கள்..!
- சுரேஷ் ரெய்னா குடும்பத்தில் பெரும் இழப்பு.. இறுதி மூச்சுவரை போராடினீர்கள்.. சின்ன தல உருக்கம்!
- 'தூக்கத்தில் பாதியில் எழும்பி கதறி கதறி அழுகை'... 'ஐயோ, கனவில் நடந்த சம்பவம்'... 'உடனே ஹாஸ்பிடல் ஓடிய பெண்'... எப்படிங்க உங்களுக்கு தெரியும், நெஞ்சை பிடித்து கொண்டு உட்கார்ந்த டாக்டர்!
- 90 நாட்களுக்கு மேல் தொடர்ந்த மாதவிடாய்!.. சுருண்டு விழும் அளவுக்க சோர்வு!.. இளம்பெண்ணுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் காத்திருந்த அதிர்ச்சி!