இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த ஆண்ட்ரியா.. திடீரென மேடையில் இருந்து இறங்கி செய்த சம்பவம்.. மொத்த fans-ம் Vibe ஆகிட்டாங்க..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள சூர்யா நகர் பகுதியில் தனியார் வீட்டு கட்டும் நிறுவனத்தின் துவக்க விழாவில் நடிகையும் பாடகியுமான  ஆண்ட்ரியாவின் இசைநிகழ்ச்சி நடந்துள்ளது வைரலாகியுள்ளது.

Advertising
>
Advertising

                             Images are subject to © copyright to their respective owners.

Also Read | "6 பந்தில் 6 சிக்ஸ்".. அரங்கையே திருப்பி பார்க்க வெச்ச கிரிக்கெட் வீரர்.. அடிச்சு முடிச்சதும் நடந்த வைரல் சம்பவம்!!

2000க்கும் மேற்பட்ட இளைஞர், பாஸ் பெற்றவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ஜெயபாரத் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் டைட்டர் சிட்டி  நடத்த, இதில், 2 மணி நேரத்திற்கு மேலாக ரசிகர்களை தனது வசீகரக் குரலாலும் கட்டிப் போட்டுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிகழ்ச்சியில் பாடும்போது, ரசிகர்கள் ஆண்ட்ரியா... ஆண்ட் ரியா என ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்தினர்.  இதனால் ஆண்ட்ரியாவும் உற்சாகமடைந்தார்.  இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜாவின் ஹிட் பாடல்களையும் 90's kids-ன் பாடல்களையும் பாடி ரசிகர்களை நடனமாட வைத்த ஆண்ட்ரியா, துப்பாக்கி படத்துக்காக விஜய்யுடன் இணைந்து பாடிய கூகுள் கூகுள் பாடலுக்கு ரசிகைகளுடன் இணைந்து நடனமாடவும் செய்தார்.

Images are subject to © copyright to their respective owners.

வடசென்னை படத்தில் வலுவான கதாபாத்திரமாக திறமான நடிப்பை வெளிப்படுத்திய ஆண்ட்ரியா, அண்மையில் அனல் மேலே பனித்துளி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மிஷ்கின்  இயக்கத்திலான பிசாசு 2-ஆம் பாகத்திலும் நடித்துள்ளார். இந்த படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | பிரபல தொழிலதிபருக்கு நடிகர் அமிதாப் பச்சன் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் போஸ்ட்..!

ANDREA JEREMIAH

மற்ற செய்திகள்