மொழிதாண்டிய ஃபேஸ்புக் காதல்.. இரவோடு இரவாக கடலூருக்கு ரயிலில் வந்து காதலனை தேடிய பெண்.. கடைசியில் நடந்த கல்யாணம்.! ஹீரோவான காவல்துறையினர்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடலூர் மாவட்டம் பெரிய கங்கனாக்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் வெங்கடேஷ். 21 வயதான இவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுஜிதா என்பவரை ஃபேஸ்புக் வழியே அறிந்து பழகி வந்திருக்கிறார்.  நாளடைவில் இவர்களுடைய உறவு காதலானது.

Advertising
>
Advertising

பின்னர் நீண்ட நாட்களாகவே சுஜிதாவிடம் எப்போது பார்க்கலாம் என்று அடிக்கடி வெங்கடேஷ் கேட்டு வந்திருக்கிறார். நேரம் வரும்போது நேரில் பார்க்கலாம் என்று சொல்லிக் கொண்டு வந்திருந்தார் சுஜிதா. ஆனால் ஒரு கட்டத்தில் சுஜிதாவுக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டபோதுதான் சுஜிதா இந்த கதையில் மிகப்பெரிய திருப்பம் ஏற்படுகிறது. ஆம், சினிமா பாணியில் சுஜிதாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு நடக்க சுஜிதாவோ, தான் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் பையனை ஃபேஸ்புக் வழியே பழகி காதலிப்பதாக சொல்ல, இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் அவருடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஆந்திராவில் இருந்து ரயில் ஏறி இரவோடு இரவாக கடலூர் வந்தடைந்து விட்டார் சுஜிதா.

கடலூர் திருப்பாதிரிப் புலியூருக்கு ரயில் மூலம் வந்தடைந்த சுஜிதா, தன்னுடைய காதலன் வெங்கடேஷ்க்கு அழைத்து நான் உங்களை பார்க்க தான் வந்திருக்கிறேன்.. நீங்கள் என்னை இப்போது வந்து காணலாம் என்று கூறி அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். இதை கேட்டதும் ஒரு அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் அந்த பெண்ணிடம் வருகிறேன் என்று சொல்லி, கடைசி வரை வரவே இல்லை என தெரிகிறது. இதனால் மொழி தெரியாமல், செய்வதறியாத சுஜிதா, ஊர் பேர் தெரியாத இடத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது சுஜிதாவை பார்த்த ரயில்வே போலீசார் விசாரிக்க, மொழி தெரியாமல் கடலூருக்கு வந்து காதல விவகாரத்தில் வெங்கடேஷை தேடிய சுஜிதாவின் நிலை கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அங்கிருந்த பெண் காவலர்கள் மனமிறங்கியுள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட வெங்கடேஷுக்கு தொடர்பு கொண்டு காவல் நிலையம் வரவழைத்து விசாரித்து இருக்கின்றனர். அப்போது வெங்கடேஷோ, திருமண செலவு, பேரியோர் கூடி பேசுவது என பல விஷயங்கள் இருக்கும்போது திடீரென எப்படி திருமணத்திற்கு தயாராவது? என்கிற தன் தரப்பு விஷயங்களை விபரமாக கூறியிருக்கிறார். சுஜிதாவோ என்ன நடந்தாலும் சரி, தான் தன் காதலனையே திருமணம் செய்து கொள்வேன் என்று தன் முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். இதனால் வெங்கடேஷின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய காவலர்கள், இந்த தம்பதியருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர்.

மேலும் திருமண செலவுகளை பொருட்படுத்தாத அந்த காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி, சொந்த செலவில் மணப்பெண்ணுக்கு தேவையான பட்டுப் புடவை சீர்வரிசை ஆகிய பொருட்களை கொடுக்க, வெங்கடேஷ் - சுஜிதா தம்பதியருக்கு திருப்பாதிரிப்புலியூர் நாகம்மன் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்திருக்கின்றனர் காவலர்கள். மொழி தெரியாமல் ஃபேஸ்புக் காதலனை மட்டுமே நம்பி வந்த சுஜிதாவுக்கு நல்ல மனம் கொண்ட காவலர்கள் உதவி இருக்கிற இந்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

FACEBOOK, MARRIAGE, WEDDING, TAMILNADU NEWS, LATEST NEWS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்