"அன்புமணினா Decent And Development Politicsனு நினைச்சீங்களா? வேட்டியை மடிச்சு கட்டுனா".. கட்சி பொதுக்கூட்டத்தில் அன்புமணி பேச்சு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற விளக்க பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்வேறு திட்டங்கள் குறித்து பேசினார்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "25 வயசு வரைக்கும் என் டயட் இப்படித்தான்".. விராட் கோலி பகிர்ந்த சீக்ரட்.. வைரல் வீடியோ..!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நீர், நிலம், விவசாயம் காப்போம் என்ற பெயரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார். அப்போது அவர் என்எல்சி சுரங்க விரிவாக்கம், என்எல்சி மூன்றாவது சுரங்கம், வீராணம் நிலக்கரி திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் குறித்து பேசினார்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து பேசிய அவர் என்எல்சி நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்துவது ஒட்டுமொத்த கடலூர் மாவட்டத்திற்கான பிரச்சனை என்றார். மேலும் அந்த இடங்கள் முப்போகம் விளையும் விவசாய மண் எனவும் அதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து இதற்கு எதிராக போராட இருப்பதாக கூறிய அன்புமணி, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து இளைஞர்கள் போராட்டம் நடத்தியது போல இந்த விஷயத்திலும் இளைஞர்கள் ஒன்று திரள வேண்டும் என்றார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த மாபெரும் விளக்க பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "நான் சென்னையில் இருக்கிறேன். ஆனால் என் மண்ணை எடுக்கிறார்களே என எனக்கே கோபம் வருகிறது. உங்களுக்கு எல்லாம் எப்போது கோபம் வரும்? நான் போராடி ஒரு பிடி மண்ணைக் கூட எடுக்க விட மாட்டேன். என் மண் அடையாளம். அன்புமணி என்றால் டீசன்ட் அண்ட் டெவலப்மெண்ட் பாலிடிக்ஸ் என்று நினைக்கிறார்கள்" என்று கூறியபடி தனது வேட்டியை மடித்து கட்டி கையில் மண்வெட்டியை உயர்த்தி காட்டினார். அப்போது இதுவே தங்களது ஆயுதம் என அவர் தெரிவித்தார்.

Also Read | "இவர ஒலிம்பிக்கு அனுப்புனா தங்கம் நிச்சயம்".. மிரள வச்ச waiter.. ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த வீடியோ..!

ANBUMANI RAMADOSS, ANBUMANI RAMADOSS SPEECH, CUDDALORE, CUDDALORE PMK MEETING

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்