“குறிப்பா பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டுகிறது!” - ‘பகாசூரன்’ பட இயக்குநரையும் செல்வராகவனையும் பாராட்டி அன்புமணி ராமதாஸ் ட்வீட்.

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி நட்ராஜ் இணைந்து  நடிக்கும் திரைப்படம் பகாசூரன். பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின்  இயக்குனர் மோகன்.G, ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம்  "பகாசூரன்" படத்தை இயக்கியுள்ளார். இப்படம் திரையரங்கில் வெளியாகி ஒளிபரப்பாகி வருகிறது. 

Advertising
>
Advertising

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், நட்டி ஆகியோருடன் ராதாரவி, K.ராஜன், ராம்ஸ், சரவண சுப்பையா, தேவதர்ஷினி சசி லையா  ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக தாராக்ஷி நடித்துள்ளார்.

சாம் C.S. இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை , ருத்ர தாண்டவம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பாரூக், இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் & முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று உள்ளது. இந்த படத்தின் ஒட்டுமொத்த தமிழக ரிலீஸ் உரிமத்தை பிரபல வினியோகஸ்தர் SSN Production சுப்பையா கைப்பற்றியுள்ளார்.

முன்னதாக இப்படத்தின் பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய இயக்குநர் மோகன்.ஜி, பகாசூரன் படம் கல்லூரி பெண்களை மிரட்டியும் அவர்களின் வறுமை சூழலை பயன்படுத்தியும் ஆன்லைன் செயலிகள் மூலம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுத்தும் உண்மை சம்பவங்கள் குறித்த தகவல் தனக்கு தெரியவந்ததாகவும், அதனால் உடனடியாக  அதை படமாக்க வேண்டும் என, தானே வாடிக்கையாளராக சென்று அந்த பெண்களை காவல்துறை மற்றும் பத்திரிகை நண்பர்கள் உதவியுடன் மீட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற ஆன்லைன் பாலியல் குற்றங்களில் பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுவதாகவும், பலரும் இதில் பணத்தை இழந்துள்ளதாகவும், இப்படி பெரும் குற்றப் பின்னணி இதில் உள்ளதாகவும் கூறி மோகன்.ஜி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். செல்போன்களை நாம் நம் பிள்ளைகள் நல்லனவற்றுக்காக பயன்படுத்துவதாக நினைப்போம், பெரும்பாலானோர் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் சிலர் பணம் சம்பாதிக்கும் மோகம், தவறுதலான மிரட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு பயந்து இப்படியான குற்றங்களில் ஈடுபடுகின்றனர். எனவே மொபைல் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு அவசியம் என பேசிய மோகன்.ஜி, அதை பற்றியே பகாசூரன் படம் பேசப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான அன்புமணி ராமதாஸ், “இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வூட்டும் ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இயக்குனர் மோகன்.ஜி, இயக்குனர் - நடிகர்  செல்வராகவன் மற்றும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்.

சமூக அக்கறை கொண்ட 'பகாசூரன்' அனைவரும் பார்க்கவேண்டிய திரைப்படம்.” என குறிப்பிட்டு பகாசூரன் படத்தை பாராட்டியுள்ளார். இதனை ஏற்ற இயக்குநர் மோகன்.ஜி, “நன்றிங்க அண்ணா, தங்கள் வாழ்த்து எல்லையில்லா மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார். 

BAKASURAN, SELVARAGHAVAN, MOHAN G, ANBUAMANI RAMADOSS

மற்ற செய்திகள்