'ஆனந்த் மகிந்திரா' வை அசரவைத்த ஆட்டோ டிரைவர்.. நேரில் அழைத்து நெகிழ்ந்து போன டிஜிபி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரையை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டிய சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

சென்னை, ஈஞ்சம்பாக்கம் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்ற இளைஞர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறது. படிப்பில் ஆர்வம் இருக்கும் அண்ணாதுரை, குடும்ப வறுமையின் காரணமாக தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு கடந்த 20 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.

அண்ணாதுரை தன்னுடைய ஆட்டோ ஓட்டும் தொழிலிலும் பல புதிய முயற்சிகளை செய்து தற்போது இந்திய அளவில் வைரலாகி வருகிறார். தனது தொழிலை நேர்மையாகவும், புதுமையாகவும் செய்து இளைஞர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் முன்மாதிரியாக விளங்கி வருவதாக பலர் இவரை புகழ்ந்து வருகின்றனர். அண்ணாதுரை குறித்தான செய்தி பிபிசி செய்திகளில் வெளிவந்த பின்னரே இப்படி ஒரு நபர் சென்னையில் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியவந்துள்ளது.

அண்ணாதுரை தனது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கு வை-பை, செய்திதாள்கள், வார இதழ்கள், டேப்லட், சிறிய குளிர்சாதனப்பெட்டி, சாக்லேட், ஸ்நாக்ஸ் என பல வசதிகளை இலவசமாக வழங்கி வாடிக்கையாளர் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

டெக்னாலஜியில் அசத்திய 19 வயது மாணவர்.. மிரண்டு போன எலான் மஸ்க்.. 5,000 டாலர் வாங்கிட்டு எனக்கு 'அத' பண்ணி கொடுங்க

நேரில் அழைத்து பாராட்டு:

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய ஆட்டோவில் நம்பி பயணிக்கும் வாடிக்கையாளர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே பெறுவாராம். இதுபோன்ற புதுமையாக பல சம்பவங்கள் செய்து வரும் அண்ணாதுரையை இன்று ஆட்டோ ஓட்டுனர் அண்ணாதுரையை, தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு, டிஜிபி அலுவலகத்திற்கு நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சான்றிதழ் வழங்கியுள்ளார்.

இவர் வெறும் ஆட்டோ ஓட்டுனர் மட்டுமல்ல, ஒரு பேராசிரியரும் கூட:

இதற்கு முன் ஆனந்த் மகேந்திர தன் டிவீட்டரில் 'எம்.பி.ஏ மாணவ மாணவிகள் ஆட்டோ அண்ணாதுரையுடன் ஒரு நாள் நேரம் செலவிட்டால் போதும், அதுவே அவர்களுக்கு வாடிக்கையாளர்களின் அனுபவ சேவையை எப்படி பூர்த்தி செய்வது என்பதற்கான பாடமாக அமைந்துவிடும். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுனர் மட்டுமல்ல, ஒரு பேராசிரியரும் கூட' என புகழ்ந்திருக்கிறார்.

தூங்குவது, சாப்பிடுவது, நடப்பது ரிப்பீட்டு.. 190-வது பிறந்தநாளைக் கொண்டாடும் உலகின் வயதான ஆமை.. ஹாப்பி பெர்த்டே ஜொனாதன்!

தொழில் மீது வைத்திருக்கும் மரியாதையை எல்லாரும் கற்றுக்கொள்ள வேண்டும்:

அவர் மட்டுமில்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளர் அஸ்வினும் தனது டிவிட்டர் பக்கத்தில் அண்ணாதுரை பற்றி குறிப்பிட்டிருந்தார். அதில், 'இவரை தொடர்ச்சியாக கவனித்து வருகிறேன். இவர் தன் தொழில் மீது வைத்திருக்கும் மரியாதையை எல்லாரும் கண்டிப்பாக பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்' என பதிவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ANAND MAHINDRA, SILENTHRABABU PRAISES CHENNAI AUTO DRIVER, ஆனந்த் மகிந்திரா, டிஜிபி சைலேந்திரபாபு, ஆட்டோ ஓட்டுநர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்