ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்... ஒரே நாளில் உலக பேமஸ் ஆன கொல்லிமலை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டின் இயற்கை சொத்துகளுள் ஒன்றான கொல்லி மலையின் அழகு குறித்து மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த மஹிந்திரா கொண்டாடி உள்ளார்.

Advertising
>
Advertising

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து வகை நிலப் பரப்புகளையும் கொண்டது தமிழ்நாடு. ஒரு பக்கம் நீண்ட கடற்கரையை எல்லையாக கொண்ட தமிழ்நாடு தான், இன்னொரு பக்கம் உலகிலேயே வேறெங்கும் இல்லாத தட்பவெப்ப சூழலுடைய மேற்குத் தொடர்ச்சி மலையைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டுக்குத் தமிழ் மொழி போல சிறப்பு சேர்ப்பவை அதன் வித்தியாசமான நிலப் பரப்புகள்.

அப்படி தமிழகத்திலேயே பலரால் அறியப்படாத இடமாகத் தான் கொல்லி மலை இருந்து வருகிறது. பலருக்கும் தமிழகத்தின் முக்கிய மலைப் பிரதேசம் என்றால் சட்டென்று நியாபகத்துக்கு வருவது கொடைக்கானலும் ஊட்டியும்தான். அந்த மலைகளுக்கு இணையான அழகைக் கொண்டது தான் கொல்லி மலை. குறிப்பாக தமிழகத்தின் வேறு எந்த மலைப் பிரதேசத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பம்சமும் கொல்லி மலைக்கு உண்டு.

கொல்லி மலைக்குச் செல்லும் சாலையில் 70 கொண்டை ஊசி திருப்பங்கள் உள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொல்லி மலைக்கு உள்ள இந்தச் சிறப்பு தென் தமிழகத்தில் பெரும்பான்மையான மலைகளுக்கு கிடையாது. இது தொடர்பாக எரிக் சோல்ஹெய்ம் என்னும் சுற்றுச் சூழல் ஆர்வலர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

அவரின் பதிவில், கொல்லி மலையின் கொண்டை ஊசித் திருப்பங்கள் கொண்ட டாப் ஆங்கிள் புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. மேலும் அவர், ‘இந்தியாவில் உள்ள மலைகளில் மிகவும் ஆச்சரியமிக்க ஒன்று தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லி மலை. அதில் தொடர்ச்சியாக 70 கொண்டை ஊசி திருப்பங்கள் உள்ளன’ என்று கூறியுள்ளார்.

இதைப் பார்த்த மஹிந்திரா வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த் மஹிந்திரா, ‘என் சொந்த நாட்டைப் பற்றி எனக்கு எவ்வளவு குறைவாகத் தெரிந்திருக்கிறது என்பதை நீங்கள் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறீர்கள் எரிக். இது மிகவும் ஆச்சரியமிக்கதாக உள்ளது. இந்த சாலையை யார் அமைத்தது என்பதை நான் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்’ என்று வியந்து கூறியுள்ளார்.

MKSTALIN, ஆனந்த் மஹிந்திரா, கொல்லி மலை, தமிழ்நாடு, ANAND MAHINDRA, KOLLI HILLS, TAMIL NADU

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்