'எடுத்துக்கோங்க...! கொரோனா நிவாரண நிதிக்கு வச்சுக்கோங்க...' 'பிச்சை எடுத்து...' 'சிறுக சிறுக சேமிச்ச பணத்தை...' நல்ல மனம் படைத்த தாத்தா...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அனைத்து பொருளாதாரம் மாற்று எல்லா வித வசதிகளும் இருக்கும் ஒரு சிலர் பேரிடர் காலத்திலும், பிறருக்கு துன்பம் ஏற்படும் நேரத்திலும் உதவ வருவதில்லை. ஆனால் எந்த வசதியும் இல்லாமல் தான் பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தாலும் அதிலிருந்து சேர்த்து வைத்த ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார் ஒரு முதியவர்.
பூல் பாண்டியன் என்னும் தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு சேர்ந்த முதியவர் பல காலங்களாக பிச்சை எடுத்து வருகிறார். பல ஊர்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வரும் இவர் தனக்கு கிடைக்கும் பணத்தில், தன் தேவைக்கு போய் மீதம் இருக்கும் பணத்தை சேர்ந்து வைப்பதை தன் பழக்கமாக உடையவர்.
அவ்வாறு சேர்த்து வைக்கும் பணம் அதிக தொகையாக மாறிய பின் நல்ல காரியங்களுக்கு தானம் செய்து வந்துள்ளார். இதுவரை பாண்டி தாத்தா பல பள்ளிகளுக்கு டேபிள், சேர், தண்ணீர் சுத்திகரிப்பு சாதனம் ஆகியவற்றை வழங்கியுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த அவர், இங்கு பல இடங்களிலும் பிச்சை எடுத்து குறிப்பிட்ட தொகையை சேகரித்து வைத்துள்ளார். கொரோனா அச்சம் காரணமாக சாலை ஓரம் வசிப்பவர்கள், பிச்சை எடுக்கும் முதியவர்களை, மாநகராட்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட தங்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலைத்தில் இருந்த பாண்டி தாத்தாவையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.
காப்பகத்திற்கு சென்ற தாத்தா தற்போதைக்கு தனக்கு எந்த செலவும் இல்லை என உணர்ந்து தான் சேமித்து வைத்திருந்த ரூ. 10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பரவி அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் பூல் பாண்டியன் தாத்தா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அதிரடியாக 144 தடையுத்தரவை... மேலும் '3 மாதங்களுக்கு' நீட்டித்த மாநிலம்... என்ன காரணம்?
- "30,000 ஊழியர்கள் மொத்தமாக வேலையை விட்டு நீக்கப்படுகிறார்களா?".. 'எமிரேட்ஸ்' ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியது என்ன?
- எங்களுக்கு 'யார் காரணம்னு' தெரிஞ்சாகனும்... '62 நாடுகள்' சேர்ந்து சீனாவுக்கு எதிராக 'தீர்மானம்...' 'விசாரணையை சந்திக்குமா சீனா?...'
- "வேலையை உதறிவிட்டு 300க்கும் மேற்பட்ட நர்சுகள் எடுத்த அதிரடி முடிவு!".. 'கொரோனா' சூழலில் 'திணறும்' மாநில அரசு!
- 'ஹெச்.ஐ.வி., ஜிகா' வைரசுக்கே 'டாடா' காட்டுன 'நாடு...' இன்று 'கொரோனாவிடம்' சிக்கி 'சீரழிஞ்சு' கிடக்கு... இந்த நிலையிலும் 'ஊரடங்கை' குற்றம் கூறும் 'அதிபர்...'
- 'இனிமேல் நீங்கள் சுதந்திர பறவைகள்'... 'பீஜிங் நகர மக்களுக்கு வந்த தித்திப்பான செய்தி'... படு குஷியில் பீஜிங்!
- "ஆர் யு ஓகே பேபி?".. லாக்டவுனில் விரக்தியில் இருந்த 'காதலிக்கு' சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய 'காதலன்!'.. வைரல் வீடியோ!
- "லாக்டவுனுக்கு முன்னாடியே.. சென்னை கோயம்பேட்டில் வண்டிய பார்க் பண்ணிட்டு போனவங்களா நீங்க?".. உங்களுக்குதான் இந்த இனிப்பான செய்தி!
- 'உலகப்புகழ்' பெற்ற நிறுவனத்துக்கு 'ஆப்பு' வைத்த அதிபர்... அதிரடி நடவடிக்கைகளால் 'மிரண்டு' போன நாடு!
- லாரியில் 'நின்றுகொண்டே' பயணம்... நடுவழியில் 'இறக்கி' விடப்பட்ட கொடுமை... உயிர் 'நண்பனுக்கு' நேர்ந்த துயரம்!