Bigg Boss 6 Tamil : "தலைவரானா கறி, முட்டை, மீனு வரும்னு வாக்குறுதி கொடுத்தீங்கள்ல?".. GP முத்துவை கிளறிய அமுதவாணன்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிக்பாஸிடம் ஜாலியாக ஜிபி முத்து வைத்த கோரிக்கை தொடர்பான வீடியோக்கள், தற்போது ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

சமீபத்தில் தமிழில் பிக்பாஸ் 6 ஆவது சீசன் ஆரம்பமாகி இருந்தது. ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ஜாலியாக நிகழ்ச்சியில் பங்கெடுக்கவே, அடுத்தடுத்த நாட்களில் டாஸ்க்குகள் மூலம் பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க தொடங்கி விட்டது.

இதன் காரணமாக, யாரும் எதிர்பாராத வகையிலான சம்பவங்களும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. இதனால், பார்வையாளர்களும் இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்புடன் கண்டு களித்து வருகின்றனர். மேலும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை போலவே, பிக்பாஸ் 6 வது சீசனும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளத்தில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன் காரணமாக, பிக்பாஸ் குறித்த கருத்துக்கள் கூட எப்போது சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆன வண்ணம் உள்ளது. தொடர்ந்து, பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின்னர், புதிய போட்டியாளராக மைனா நந்தினி களமிறங்கி உள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு பக்கம் பல விஷயங்கள் நடந்து கொண்டே இருந்தாலும், ஜிபி முத்து தினந்தோறும் செய்யும் விஷயங்களும் ட்ரெண்ட் ஆக தவறுவதில்லை.

இதற்கு மத்தியில், பிக்பாஸ் வீட்டின் முதல் கேப்டனாக டாஸ்க்கில் வெற்றி பெற்ற ஜிபி முத்து தேர்வாகி உள்ளதால், முழுக்க முழுக்க அவரை சுற்றி கலகலப்பாக தான் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், பிக்பாஸிற்கு ஜிபி முத்து கோரிக்கை ஒன்றையும் வைத்துள்ளார்.

கிளீனிங் டீமில் இருந்த ரட்சிதா கேட்டுக்கொண்டதற்கு இணங்க கோரிக்கை ஒன்றை கேமரா முன் ஜிபி முத்து முன் வைத்தார் அதன்படி கிளீன் பண்ணி போடுவதற்கு கவர் வேண்டும் என்று பிக்பாஸிடம் கேமரா முன் அவர் முறையிடுகிறார். அந்த சமயத்தில், ஜிபி முத்து அருகே வரும் அமுதவாணன், "மீனு, முட்டை, கறி எல்லாம் ஜெயித்தால் வாங்கி தரேன் என்று வாக்கு கொடுத்தாய் அல்லவா வாங்கி தாங்க தலைவரே" என்று கேட்கிறார்.

அதன் பிறகு, பிக்பாஸிடம் பேசும் ஜிபி முத்து, இவர்களுக்கு எல்லாம் முட்டை கொடுத்து விடுங்கள் என்றும் சாப்பிட்டு எனர்ஜியை ஏத்தட்டும் என்று கோரிக்கை வைக்கிறார். தலைவர் ஆனது முதல், ஜிபி முத்துவை சுற்றி நடக்கும் அட்ராசிட்டிகளும் ரசிகர்களை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

GP MUTHU, AMUDHAVANAN, BB6 TAMIL, BIGGBOSS 6 TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்