"என் புள்ள எப்போ ஊருக்கு வருவான்னு தெரியலயே.." அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த சோகம்.. வீடியோ காலில் கதறி அழுத மகன்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தற்போது மிகவும் தீவிரமாக மோதல் நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

"உயிரே போனாலும் நான் இப்போ ஊருக்கு வரமாட்டேன்.." பிடிவாதத்துடன் இந்திய மாணவி.. நெகிழ்ச்சி பின்னணி

உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.

அதே போல, இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடும் முயற்சி

இன்னொரு பக்கம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் போருக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மெட்ரோ சுரங்கம், பதுங்கு குழி உள்ளிட்ட இடங்களில், பாதுகாப்புக்கு வேண்டி தஞ்சம் புகுந்துள்ளனர். மேலும், இந்திய மாணவர்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வர முடியாத சூழ்நிலை

அதன் பெயரில், கடந்த சில நாட்களாகவே, விமானத்தில் இந்திய மாணவ மாணவிகள் மற்றும் மக்கள், தங்களின் சொந்த ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். தமிழக மாணவர்கள் பலரும் மீண்டும் சொந்த ஊருக்கு வந்தாலும், சிலரால் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், ஆம்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் உக்ரைனில் சிக்கியுள்ளார்.

மருத்துவம் இறுதியாண்டு

ஆம்பூர் பகுதியை அடுத்த புத்தூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல். உக்ரைன் முஜைல் பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில், மருத்துவம் இறுதியாண்டு படித்து வருகிறார் சக்திவேல். இவரின் பெற்றோர் சங்கர் மற்றும் சசிகலா ஆகியோர், தங்களின் ஊரில் விவசாய வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், உக்ரைனில் போர் நடைபெற்று வருவதையும், இவர்கள் தெரிந்து கொண்டுள்ளார்கள்.

துயரத்தில் இருந்த தாய்

தன்னுடைய மகனும் உக்ரைனில் இருப்பதால், அவரின் நிலையை நினைத்து, மனதுக்குள் வருந்திக் கொண்டே இருந்துள்ளார் தாய் சசிகலா. அடிக்கடி வீடியோ கால் மூலம் தனது தாய்க்கு மகன் சக்திவேல் ஆறுதல் கூறிவந்துள்ளார். ஆனாலும் மகன் சரி வர சாப்பிடுகிறாரா, தூங்குகிறாரா நல்லபடியாக திரும்பி வருவாரா என்ற கேள்விகளுடன் அதிகம் துயரத்துடன் சசிகலா இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பரிதாபம்

இதனிடையே, மகனின் நிலையை எண்ணி கவலைப்பட்டுக் கொண்டிருந்த சசிகலா, திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, சசிகலா உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

உறவினர்கள் கோரிக்கை

தாயின் இறுதி சடங்குகளை செய்ய மூத்த மகன் சக்திவேல் திரும்பி வர முடியாமல், வீடியோ காலில் தாயின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள், விரைவில் சக்திவேல் மற்றும் அவருடன் இருக்கும் மாணவர்களை உக்ரைனில் இருந்து மீட்டு, சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டுமென உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கோப்பையுடன் வேகமாக ஓடிய ரோஹித்.. "பிளேயர்ஸ் கிட்ட குடுக்காம என்ன பண்ணாரு தெரியுமா??.." வைரலாகும் விஷயம்

UKRAINE, AMBUR MOTHER, INDIAN STUDENT, SON, ரஷ்யா, உக்ரைன், மகன், தாய்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்