‘இத்தனை வருஷத்துக்குள்ள’... ‘10 லட்சம் வேலை வாய்ப்புகள்’... ‘பிரபல நிறுவனம் அதிரடி உறுதி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியாவில் அடுத்த 5 ஆண்டுக்குள் புதிதாக 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் நிறுவனங்களுள் ஒன்றான அமேசான், இந்தியாவில் சிறப்பான தொழில் வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அதிகளவில் முதலீடு செய்து இந்தியாவின் ஃபிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை வழங்கி வருகிறது. இந்நிலையில், தொழில்நுட்பம், இன்ஜீனியரிங், உள்கட்டமைப்பு மற்றும் அதன் லாஜிஸ்டிக்ஸ் நெட்வொர்க்கின் முதலீடுகள் மூலம் 2025-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 மில்லியன் அதாவது 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகின் மிகப் பெரிய பணக்காரரும், அமேசான் நிறுவனருமான ஜெஃப் பெசோஸ் அவர்களின் இந்தியப் பயணத்தை அடுத்து இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும், 5,50,000-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கும், உள்ளூர் கடைகள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கும் சஹேலி, கரிகர் மற்றும் ஐ ஹேவ் ஸ்பேஸ் போன்ற திட்டங்கள் மூலம் வளர்ச்சி வாய்ப்புகளை விரிவுப்படுத்த அமேசான் திட்டமிட்டுள்ளது.  முன்னதாக இந்தியாவில் ​​ஜெஃப் பெசோஸ் 3 நாட்கள் தங்கியிருந்தார்.

அப்போது, சிறு மற்றும் குறு நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் 1 பில்லியன் டாலர் அதாவது 7100 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இந்த முதலீடு குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் பியுஷ் கோயல் ‘அமேசான் நிறுவனம் இந்தியாவில் 1 பில்லியன் டாலரை முதலீடு செய்வதால், இந்தியாவுக்கு எந்த ஒரு பெரிய உதவியையும் செய்யவில்லை. இந்தியாவில் முதலீடு செய்வதால் மின்னணு வர்த்தகத்துக்கு ஆதரவான செயல்பாடுகளை எடுக்க முடியாது. எந்த நிறுவனமாக இருந்தாலும் அது இந்தியாவின் சட்டவிதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட வேண்டும்’ என்று கூறியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

AMAZON, JOBS, INDIA, LOGISTICS, NETWORK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்