'தமிழகம்' முழுவதும் நாளை கடையடைப்பு... தூத்துக்குடியில் தந்தை-மகன் 'உயிரிழந்த' விவகாரத்தில்... வணிகர் சங்கம் கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகம் முழுவதும் நாளை கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த காமராஜ் என்பவர் கடந்த 19-ம் தேதி அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு மேலாக கடையை திறந்து வைத்திருந்ததாக போலீசாருடன் காமராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்க்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காமராஜ், பென்னிக்ஸ் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், நேற்று இரவு நெஞ்சுவலிப்பதாகக் கூறிய பென்னிக்ஸை, போலீஸார் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். வரும் வழியிலேயே பென்னிக்ஸ் உயிரிழந்தார். தொடர்ந்து, இன்று காலை சிறையில் இருந்த பென்னிக்ஸின் தந்தை ஜெயராஜும் உயிரிழந்தார். அடுத்தடுத்த சில மணி நேரங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகன், தந்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து சாத்தான்குளம் பகுதியில் வணிகர்கள் பலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு எஸ்.ஐ-க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் 2 வணிகர்கள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகா் சங்கப் பேரவைத் தலைவா் வெள்ளையன் தெரிவித்துள்ளார். மேலும் இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூபாய் 1 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்