'அக்டோபர் 6ம் தேதி சென்னையில் இருங்கள்'... 'எம்.எல்.ஏ'களுக்கு பறந்த அதிரடி உத்தரவு'... இதுதான் காரணமா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் நாளுக்கு நாள் அரசியல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த கருத்து தற்போது பூதாகரமாக மாறியுள்ள நிலையில், அது நடந்து முடிந்த அதிமுக செயற்குழு கூட்டத்திலும் எதிரொலித்தது. அதே நேரத்தில் சசிகலாவும் சிறையிலிருந்து வெளியே வர இருப்பதால், அதிமுகவில் அடுத்தடுத்து என்னென்ன நகர்வுகள் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு, அரசியல் வட்டாரத்தில் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் நிலவுகிறது.

இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்தையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி,  வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆலோசித்து முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே அதிமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வரும் அக்டோபர் 6ம் தேதி சென்னை வரும்படி அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. 7ம் தேதி யார் முதல்வர் வேட்பாளர் என்பது குறித்த அறிவிப்பை அதிமுக வெளியிடவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்