‘இரண்டரை வருஷமாக மது.. கஞ்சா.. போதை’..புத்தாண்டில் ‘புதுசாய்’ மாறிய இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருப்பூர் மாவட்டம் செலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் ராமேஸ்வரம் மனோலயா காப்பகத்தினரால் மீட்கப்பட்டார்.

தவறான நண்பர்களின் சகவாசத்தில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி  மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் குடும்பத்தைப் பிரிந்த வாலிபர் இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் இணைந்தார்.

தென்னிந்தியாவின் புனித ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு ஏராளமான மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பிற பகுதிகளிலிருந்து அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை பாதுகாக்கும் நல்லெண்ணத்தில் மனோலயா என்ற தனியார் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் செலாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் மனநலம் பாதிக்கப்பட்டு, முற்றிய நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனோலயாவினால் மீட்கப்பட்டார். இரு வருடங்களுக்கு பின் அவரது மனநலம் படிப்படியாக சீரடைய தொடங்கியது.

சில  மாதங்களுக்கு முன் ஈஸ்வரன் குணமடைந்து தனது சொந்த ஊர் மற்றும் குடும்பம் குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து கோவையை சேர்ந்த  தன்னார்வலர் ஒருவர் மூலமாக ஈஸ்வரன் குடும்பத்தை கண்டுபிடித்து அவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர் புத்தாண்டு அன்று மனோலயா காப்பகத்திற்கு வந்திருந்தனர். இதனையடுத்து காப்பகத்தின் நிர்வாகிகள் சுனில்குமார் மற்றும் பி.ஆர்.ஓ. சிவராஜ் ஆகியோர் ஈஸ்வரனை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

கஞ்சா, மது போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகி ஊரை விட்டு  ஒதுக்கி வைக்கப்பட்ட ஈஸ்வரன் இரண்டு ஆண்டுகள் கழித்து குணமடைந்து நல்லபடியாக புத்தாண்டில் இணைவது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதற்கு உறுதுணையாக இருந்த காப்பகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஈஸ்வரனின் உறவினர்கள் நெகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.

WEED, ALCHOCOLIC, RAMESWARAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்