உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ‘ஜல்லிக்கட்டு’.. 12 காளைகளை அடக்கி ‘முதல் பரிசை’ தட்டிச்சென்ற மாடுபிடி வீரர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலக புகழ்பெற்ற பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 12 காளைகளை அடக்கி கண்ணன் என்பவர் முதல் பரிசை தட்டுச்சென்றார்.
பொங்கல் பண்டிகையின் 3-வது நாளான இன்று உலக பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி காலை 8.30 மணிக்கு தொடங்கியது. கோட்டை முனியசாமி வாடிவாசலில் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
8 சுற்றுகளாக நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 வீரர்களும், 720-க்கும் மேற்பட்ட காளைகளும் களமிறக்கப்பட்டன. வெற்றிபெற்ற காளை மற்றும் காளையர்களுக்கு கார், தங்க நாணயம், கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதில் அதிகபட்சமாக 12 காளைகளை அடக்கிய விராட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சார்பில் முதல் பரிசாக கார் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 9 காளைகளை அடக்கி 2வது இடத்தை பிடித்த அரிட்டாபட்டியைச் சேர்ந்த கருப்பணனுக்கு மோட்டார் சைக்கிளும், 8 காளைகளை அடக்கிய சக்திக்கு ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது. சிறந்த மாட்டிற்கான பரிசு குருவித்துறையைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திடீரென கருப்புப்பட்டையுடன் கோசம் போட்ட மாடுபிடி வீரர்கள்'... பரபரப்பான அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
- ‘வேண்டாம்’!.. சட்டென பாதுகாவலர் கையை பிடித்து ‘தடுத்த’ ராகுல்காந்தி.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவம்..!
- 'லவ் அங்க தான் ஸ்டார்ட் ஆச்சு...' ஸோ மேரேஜும் 'அந்த எடத்துல' வச்சு தான் நடத்தணும்...! - பெர்மிசன் கேட்டு காதல் ஜோடி மனு...!
- "ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கக் கூடாது!".. மீண்டும் சர்ச்சையை கிளப்பும் பீட்டா அமைப்பு!.. தமிழக முதல்வருக்கு அவசர கடிதம்!!
- VIDEO: 'நான் தாங்க அவர் wife... நகைய கொடுங்க!'.. சினிமா உதவி இயக்குநரின் கதையில் ட்விஸ்ட் வைத்த 54 வயது பெண்மணி!!.. பகீர் சம்பவம்!
- ‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்!’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்!’
- ‘கொடுத்த முகவரில் யாரும் இல்லை’!.. பிரிட்டனில் இருந்து மதுரை திரும்பிய 4 பேர் ‘மாயம்’.. புதிய கொரோனா வைரஸ் அச்சுறுத்தும் சமயத்தில் நடந்த அதிர்ச்சி..!
- இவர்கிட்ட ‘ஆசீர்வாதம்’ வாங்குனா பிரச்சனை தீர்ந்திரும்.. பரபரப்பை கிளப்பிய திடீர் ‘சாமியார்’.. ஒரு வாரத்துக்கு முன்னாடி அவர் இருந்த நிலைமையே வேற..!
- தமிழகத்தில் 'ஜல்லிக்கட்டு' போட்டிகள் நடைபெறுமா??... 'தமிழக' அரசு வெளியிட்ட 'முக்கிய' அறிவிப்பு!!!
- ‘ஏம்மா அப்படி பண்ண’!.. வீடியோ காலில் கதறியழுத தாய்.. மனதை உருக்கிய சம்பவம்..!