"'சினிமா' என்னோட 'தொழில்'... சிலர் செய்யுற 'வேலை', என்ன வருத்தப்பட வைக்குது..." நடிகர் 'அஜித் குமார்' வெளியிட்ட 'அறிக்கை'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வந்த 'வலிமை' திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா தொற்று காரணமாக தள்ளிப் போன நிலையில், தற்போது அதன் படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்று வருகிறது.

கிட்டத்தட்ட படத்தின் ஷூட்டிங் முடியும் தருவாயில் உள்ள நிலையில், படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது பின்னர் அந்த திரைப்படத்தை பற்றி எந்தவொரு தகவலையும் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கவில்லை.  இதனால், அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்து வந்தனர்.

அது மட்டுமில்லாமல், அவர்கள் ஒரு படி மேலே சென்று, அரசியல் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியிலும் வலிமை அப்டேட் வேண்டும் என கூச்சலிட்டனர். சமீபத்தில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்கு நடுவே, பீல்டிங் நின்று கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்டது உதாரணம்.

இந்நிலையில், இதுகுறித்து வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், தனது ட்விட்டர் பக்கத்தில், விரைவில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, நடிகர் அஜித் குமார் தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்து அறிக்கை ஒன்றையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், 'கடந்த சில நாட்களாக, எனது ரசிகர்கள் என்ற பெயரில், நான் நடித்து வரும் வலிமை படம் சம்மந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே. எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில், மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீதுள்ள மரியாதையை காட்டும்.

 

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூகவலைதளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்