அதிமுக: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பை வெளியிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Advertising
>
Advertising

Also Read | "இது ட்ரெய்லர் தான்".. மோத இருக்கும் இரண்டு பிரம்மாண்ட கேலக்சிகள்.. வைரலாகும் புகைப்படம்.. ஆய்வாளர்கள் சொல்லிய அதிரவைக்கும் உண்மை..!

பொதுக்குழு

அதிமுக-விற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது நீதிமன்றம் வரையில் சென்றது.

இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் அதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பார் எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

முன்னதாக இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் ஓபிஎஸ். ஆனால், நீதிபதி ராமசாமி கிருஷ்ணன் அந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தார். இதனையடுத்தே பொதுக்குழு நடைபெற்றது. இந்நிலையில் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்திருந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் கடந்த ஜூலை 29-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பையும் விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கை `உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம். மூன்று வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்' என உத்தவிட்டனர்.

தீர்ப்பு

இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அதில்,"அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். பொதுக்குழுவை கூட்ட ஒரு சட்ட ஆணையரை கட்சி நியமிக்க வேண்டும். அதே போல, கட்சி சார்ந்து தனிக்கூட்டம் நடத்தக் கூடாது' என உத்தரவிட்டுள்ளார். இதனால் ஓபிஎஸ் தரப்பு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் இந்த தீர்ப்பினை கொண்டாடி வருகின்றனர்.

Also Read | "அடுத்து அதைத்தான் வாங்க போறேன்".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்.. பத்திக்கிட்ட ட்விட்டர்..!

OPANNEERSELVAM, EDAPPADI K. PALANISWAMI, AIDMK, AIDMK GENERAL SECRETARY POSITION, CHENNAI, அதிமுக, ஓபிஎஸ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்