'இளைஞர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்'... 'ரூ.50 ஆயிரம் கோடியில் முதல்வரின் மெகா பிளான்'... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் சம்பத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய முதல்வர், ''தமிழக மக்கள் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிம்மதியை தி.மு.க. கெடுக்கப் பார்க்கிறது. இந்த தேர்தல் என்பது தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையே நடக்கும் தேர்தல்.
இளைஞர்களுக்குப் பயன்படும் விதத்திலும் அவர்களின் வேலைவாய்ப்பினை பெருக்கும் விதமாகவும் கடலூரில் ரூ.50 ஆயிரம் கோடியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா அமைக்கப்படும். இதன் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் மீனவர்களுக்கு தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ. 7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
மு.க.ஸ்டாலின் இந்த அரசைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இந்த அரசு செயல்படவில்லை என்று கூறுகிறார். மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை அவர் எதையும் சிந்தித்துப் பேசுவதில்லை. இனி தமிழக மக்கள் அரசிடம் எந்த புகார் மனுவும் கொடுக்க வேண்டியதில்லை. 1100 போன் எண்ணில் தொடர்பு கொண்டு கூறினாலே அந்த பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும்.
கடலூர் நகரம் இனி வெள்ளத்தால் பாதிக்கப்படாது. தாழ்வான பகுதிகளை மேம்படுத்த ரூ.230 கோடியில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இனி மின் தடையும் இங்கு ஏற்படாது'' என முதல்வர் தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘ஊர்ந்து போய் முதல்வராக நான் என்ன பாம்பா? பல்லியா?’!.. ‘பேசுறதுக்கு ஒரு தகுதி வேண்டா..!’.. பரப்புரையில் முதல்வர் ஆவேசம்..!
- ‘இந்த விஷயத்துல தமிழகம்தான் முதலிடம்’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!
- 'அவங்க ரெண்டு பேரும் தான் என் தெய்வம்...' 'ஏரி, குளம், குட்டைகளை தூர்வாரியது எங்கள் ஆட்சி...' - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை...!
- 'அந்த ஆபத்திலிருந்து உங்கள காத்தது இந்த 'பழனிச்சாமி' தான்'... 'இவங்க ஓட்டு கண்டிப்பா திமுகவுக்கு இல்ல'... முதல்வர் அதிரடி!
- ‘அவரின் கனவு ஒருநாளும் பலிக்காது’!.. ‘ஒரே மேடையில் என்னுடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா..?’.. முதல்வர் பழனிசாமி சவால்..!
- 'தேர்தல் வரலாற்றிலேயே இப்படி ஒரு வாக்குறுதியை கேள்விப்பட்டிருப்போமா'?... 'அசர வைத்த அதிமுக வேட்பாளர்'... வாயடைத்து போன மக்கள்!
- ‘அரசு வழங்கிய 7.5% உள் இடஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்’!.. பரப்புரையில் முதல்வர் பழனிசாமி..!
- 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்...' - தேர்தல் பரப்புரையில் முதலைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி...!
- 'மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு...' 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கினோம்...' - முதல்வர் பெருமிதம்...!
- புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி கொண்டு வந்தது அதிமுக அரசு... தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!