"இருண்டு கிடந்த தமிழகத்தை ஒளி வீச வைத்தது 'அதிமுக' தான்..." சூறாவளி பிரச்சாரத்தில் 'தமிழக' முதல்வர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வேண்டி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்.
அப்போது பேசிய முதல்வர், 'இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், உயர்க் கல்விக்கு செல்வோர் விகிதமும் தமிழகத்தில் தான் அதிகம். அதே போல, இந்தியாவிலேயே தொழில் நிறுவனங்களுக்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது' என முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் கூறினார்.
பின்னர் பேசிய முதல்வர், 'கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை திமுகவின் ஆட்சியில், இருண்டுக் கிடந்த தமிழகத்தை, மின்மிகை மாநிலமாக அதிமுக அரசு மாற்றியமைத்துள்ளது. திமுக ஆட்சியில் கையெழுத்திடப்பட்ட மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்ததும் அதிமுக தான்.
கடந்த 4 வருடங்களாக, அதிமுக ஆட்சியை கலைக்க, கட்சியையும் உடைக்க, திமுக தலைவர் ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டார். ஆனால், அதனை அதிமுக தொண்டர்களின் ஆதரவோடு தவிடு பொடியாக்கினோம்' என்றும் முதல்வர் தனது பிரச்சாரத்தை போது எடுத்துரைத்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "நீர் மேலாண்மை விஷயத்துல... 'இந்தியா'லயே நம்ம தான் 'டாப்பு'... 'தமிழக' முதல்வரின் 'அதிரடி' பிரச்சாரம்!!
- 'மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு...' 'அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கினோம்...' - முதல்வர் பெருமிதம்...!
- "இத மட்டும் தவறாம கரெக்டா செஞ்சுருங்க.." 'தேர்தல்' பிரச்சாரத்திற்கு நடுவே... 'தமிழக' முதல்வரின் 'முக்கிய' கோரிக்கை!!
- "கருத்து கணிப்புகளை 'பொய்' ஆக்குவோம்... 'மக்கள்' கரெக்ட்டான 'தீர்ப்பு' வழங்குவாங்க..." 'தமிழக' முதல்வர் 'கருத்து'!!
- "'கூட்டணி'ல இருந்து அவங்க போனது... எங்களுக்கு ஒன்னும் பிரச்சனைய உண்டு பண்ணாது..." 'தமிழக' முதல்வர் 'அதிரடி' கருத்து!!
- 'அதிமுக' கூட்டணியில் இணைந்த மற்றொரு 'கட்சி'... 'ஆறு' தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக 'தலைமை'!!
- 'இரண்டாம்' கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட 'அதிமுக'... யார் யாருக்கு எந்தெந்த 'தொகுதி'??.. முழு 'விவரம்' உள்ளே!!
- 'எந்த தொகுதியில் யார் வேட்பாளர்...'தீவிர ஆலோசனையில் அதிமுக'!!... விரைவில் வெளியாகும் 'பட்டியல்'??..
- Breaking: 'அதிமுக கூட்டணியில் இருந்து விலகுறோம்...' - தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு...!
- "'குடும்ப' தலைவிகளுக்கு மாதந்தோறும் 1500 'ரூபாய்'... 'மகளிர்' தினத்தில் 'தமிழக' முதல்வரின் அதிரடி அறிவிப்பு!!