அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் போட்டியின்றி தேர்வு
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் அறிவித்துள்ளார்.
அதிமுக ஜெயலலிதா மறைவுக்குப்பின் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் சிறைக்குச் சென்றார். அதன் பின்னர் பிரிந்து இருந்து ஓபிஎஸ் இபிஎஸ் இணைந்தனர். சசிகலா, டிடிவி தினகரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கட்சி விதிகள் திருத்தப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், வழிகாட்டுக்குழு அமைக்கப்பட்டது. ஓபிஎஸ்-இபிஎஸ் அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்தனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படலாம் என விதி திருத்தப்பட்டது.
ஆனால் அண்மையில் நடந்த செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகள் 20, 43, 45, ஆகியவை திருத்தப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவது ரத்து செய்யப்பட்டது, கட்சியின் பொதுச் செயலாளர் போல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்து நேரடியாக கட்சித்தொண்டர்களால் ஒற்றை வாக்கில் தேர்வு என விதி திருத்தப்பட்டது.
அதிமுக உட்கட்சித்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் அண்மையில் தொடங்கியது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளுக்கும் கூட்டாக வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும். அவர்களை கட்சி உறுப்பினர்கள் 10 பேர் முன் மொழிய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
தலைமையை எதிர்த்து யாரும் போட்டியிட வாய்ப்பில்லை என்ற நிலை இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 3ம் தேதி காலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு கொடுக்க ஓட்டேரி அதிமுக தொண்டர் பிரசாத் சிங் என்பவர் வந்தார். அவர் உள்ளேச்சென்று வேட்புமனுவை கேட்டுள்ளார். அவருக்கு தகுதி இல்லை என்பதனால் மனு இல்லை என்று அனுப்பினர். இதனிடையே டிசம்பர் 4ம் தேதி ஓபிஎஸ்-இபிஎஸ் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்பின்னர் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக, தேர்தல் ஆணையராக செயல்பட்ட பொன்னையன் அறிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Mla நிதி எங்கே.. விசாரித்த போது எனக்கு கிடைத்த தகவல் .. பாய்ந்த எடப்பாடி பழனிசாமி!
- அதிமுகவில் மாறிய 2 விஷயங்கள்.. ஒருங்கிணைப்பாளர் தேர்வு முறையில் அதிரடி மாற்றம்
- அதிமுக தலைமையிடம் இருந்து திடீரென இரவில் வந்த நீக்க அறிவிப்பு.. திமுக செல்கிறாரா அன்வர் ராஜா?
- இது பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சி.. ஓபிஎஸ் ஆவேசம்
- என்னையே குறி வைக்கிறார்கள்.. எத்தனை கேஸ் வேணுமானாலும் போடட்டும்.. எஸ்பி வேலுமணி டென்சன்
- VIDEO: இளைஞர்களின் வீடியோவை பகிர்ந்த எடப்பாடி பழனிசாமி.. திமுக அரசு மீது கடும் தாக்கு..!
- பாஜகவிற்கு தாவிய வழிகாட்டு குழு உறுப்பினர்.. அதிர்ச்சியில் அதிமுக-வினர்.. பின்னணி என்ன?
- அடுத்த 'சென்னையாக' மாறப்போகும் கோவை...! - 'அடுக்கடுக்கான' முதலமைச்சரின் திட்டங்கள்...! - வேகமெடுக்கும் கோவையின் வளர்ச்சி...!
- 'பேரிடியாய் வந்த செய்தி'... 'ஓபிஎஸ் மனைவி காலமானார்'... சென்னை மருத்துவமனையில் பிரிந்த உயிர்!
- ரெய்டு நடக்கப்போவது வேலுமணிக்கு முன் கூட்டியே லீக் செய்யப்பட்டதா?.. யார் அந்த கருப்பு ஆடு?.. செம்ம ட்விஸ்ட்!