'முதல்வருக்கு எதிராக திமுக களமிறக்கிய இளைஞர்'... ஸ்டார் தொகுதியான எடப்பாடியில் நிலவரம் என்ன?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் தபால் ஓட்டுகள் மொத்தம் 4293 பதிவாயின.

தமிழக நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான எடப்பாடி சட்டமன்றத் தொகுதி தமிழகம் முழுவதும் வாக்குகள் சங்ககிரி விவேகானந்தா கல்வி நிறுவன மையத்தில் வைத்து எண்ணப்பட்டன. இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க. சார்பில் சம்பத்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் தாசப்பராஜ், அ.ம.மு.க. சார்பில் பூக்கடை சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா மற்றும் சுயேச்சைகள் உள்பட 28 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

முதலில் தபால் ஓட்டுகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டது. இந்த தொகுதியில் தபால் ஓட்டுகள் மொத்தம் 4293 பதிவாயின. இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்தார். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 5484 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருந்தார். ஓட்டு விவரம் வருமாறு:-

எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.)- 5484

சம்பத்குமார் (தி.மு.க.)- 2159

தற்போது எடப்பாடி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை பெற்று வருகிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்