கோமதிக்கு அ.தி.மு.க. சார்பில் நிதியுதவி.. முதலமைச்சர் பழனிச்சாமி வழங்கினார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு, அ.தி.மு.க. சார்பில் 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

2019 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ,கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில் 800 மீட்டர் தடகளப் போட்டியில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து, தங்கம் வென்று நாட்டிற்கு சிறப்பை தேடி தந்துள்ளார். அதே போல், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கத்தை தட்டி வந்துள்ளார். 

தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு, தி.மு.க. சார்பில் 10 லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் காங்கிரஸ் அறக்கட்டளை உறுப்பினர்கள் 5 லட்சத்திற்கான காசோலையை கோமதிக்கு வழங்கி உள்ளனர்.

அ.தி.மு.க. சார்பில், கோமதி மாரிமுத்துவுக்கு 15 லட்சம் ரூபாயும், ஆரோக்கிய ராஜீவுக்கு 10 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் அறிவித்திருந்தனர்.

அதன்படி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் வீட்டில்  கோமதி மாரிமுத்துவுக்கு பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.  அங்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் வழங்கி பாராட்டினர். அதனை பெற்றுக்கொண்ட கோமதி மாரிமுத்து, முதலமைச்சர் பழனிசாமிக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

GOMATHIMARIMUTHU, AIADMK, REWARDS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்