இப்போதான் ‘நிவர்’ முடிஞ்சது அதுக்குள்ள இன்னொன்னா..! வங்கக்கடலில் உருவாகும் ‘புதிய’ காற்றழுத்த தாழ்வு நிலை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நிவர் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று மாலை அதிதீவிர புயலாக வலுவடைந்தது. இதனை அடுத்து நேற்று மாலை மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்தது. புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே இரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புயல் கரையை கடந்தது. அப்போது புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கிலோமீட்டர் வரை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. தீவிரபுயல் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாக மாறி மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய தெற்கு வங்கக்கடலில் வரும் 29ம் தேதி மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்