'அக்கா' நந்தினியைத் தொடர்ந்து, Tasmac-ஐ எதிர்த்த 'தங்கை' நிரஞ்சனா.. அதிரடியாக் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு ஏற்று நடத்தும், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பேசியதாக சட்டக் கல்லூரி மாணவி நந்தினி மிக அண்மையில், அவரது தந்தையுடன் சேர்த்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி நந்தினிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக ஜூன் 27-ஆம் தேதி மதுரை காவல்துறையினரால் நந்தினியும், அவரது தந்தையும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நந்தினியின் சகோதரியும், 5-ஆம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக நந்தினி கைது செய்யப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், நந்தினியின் தங்கை நிரஞ்சனா பேசிய வீடியோ வைரலானது. அதில், ‘ஐபிசி செக்ஷன் 328-ன் படி போதைப்பொருள் விற்பது கடுமையான குற்றம். உள்நோக்கத்துடன் இந்த குற்றத்தை செய்பவர்களை 10 ஆண்டுகள் வரையில் சிறையில் அடைக்கலாம். ஆனால் இதை எதிர்த்து கேட்ட என் அக்கா நந்தினியையும் அப்பாவையும் கைது செய்துள்ளனர். இவ்விஷயத்தில் அரசாங்கமும் நீதிமன்றமும் இணைந்து கூட்டாக செயல்படுகிறது. இதை எதிர்த்து ஜூலை 8-ஆம் தேதி திங்கள் அன்று மதுரை சட்டக் கல்லூரி முன்பாக காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகிறேன்’ என்று அறிவித்திருந்தார்.
இந்த வீடியோவில் நிரஞ்சனா பேசிய விதம்தான் அவர் மீதான இந்த கைது நடவடிக்கைக்குக் காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'திருடங்கிட்டயே திருட்டா?'.. சென்னை பெண் போலீஸ் செய்த காரியம்.. சிக்கிய சிசிடிவி!
- 'யாரும்மா.. இந்நேரத்துல ஏன் நிக்குறீங்க'.. ரோந்துக்கு சென்ற போலீஸாருக்கு அதிர்ச்சி.. சென்னையில் நடந்த சம்பவம்!
- 'இப்ப என்ன பண்ணுவீங்க?'.. டிராஃபிக் போலீஸிடம் வாகன ஓட்டி செய்த விநோத காரியம்!
- 'சேர்ந்தே சண்ட போட்டுட்டு'...'சேர்ந்தே எடுத்த விபரீத முடிவு'... குழந்தைகளை அனாதை ஆக்கிய பெற்றோர்!
- 'தமிழகத்தை உலுக்கிய 'ஆணவக்கொலை' ... 'காதலனை தொடர்ந்து'...'காதலிக்கு நேர்ந்த பரிதாபம்'!
- 'சென்னை' சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம்'... 'கைதானவரின் மனைவி' செய்த அதிர வைக்கும் செயல்' !
- 'எந்த பஸ்? எங்க எறங்குறான் அவன்?'.. காவலரின் 'மனைவி' பக்கத்தில் அமர்ந்த பயணியின் கதி!
- டாஸ்மாக்குக்கு எதிராக 'ஒரே ஒரு கேள்விதான்'.. 'ஒரு வாரத்துல' கல்யாணம் ஆகப்போகும் மாணவிக்கு சிறை!
- 'அதிர்ச்சியில் உறைந்த சென்னை'... '4 வயது 'சிறுமி'க்கு நேர்ந்த கொடூரம்'... 'கழிவறை வாளி'க்குள் சடலம்!
- 'ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது'... 'அபராதம்' வீட்டுக்கே தேடி வரும்'... 'சென்னை போலீஸ்' அதிரடி!