‘பூஜ்ஜியம்’!.. நீண்ட நாள்களுக்கு பின் சென்னை மக்களுக்கு ஒரு ‘குட் நியூஸ்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நீண்ட நாள்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றின் 2-ம் அலை வேகமாக பரவியது. அதனால் நாள் ஒன்றுக்கு 35 ஆயிரம் வரை நோய் தொற்று ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. தொடர்ந்து 51-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று (11.07.2021) மாநிலத்தில் 2775 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 171 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்ட நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று சென்னையில் ஒரு கொரோனா உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 23-ம் தேதிதான் சென்னையில் கொரோனா உயிரிழப்புகள் பூஜ்ஜியமாக இருந்தது.
இதுவரை தமிழ்நாட்டில் மொத்தமாக 33,418 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் மாநிலம் முழுவதும் 47 கொரோனா உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதில் இணை நோய் இல்லாத 9 பேரும், 50 வயதுக்கு குறைவானவர்கள் 8 பேரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கைய மீறி போயிடுச்சு!.. 'அந்த' முடிவ தவிர வேற வழியில்ல!'.. இந்தியா - இலங்கை தொடர்... முக்கிய அறிவிப்பு வெளியீடு!
- ஃபர்ஸ்ட் 'அந்த ஆப்' இன்ஸ்டால் பண்ணிட்டு... வீடியோவ 'லைக்' பண்ணி 'ஸ்க்ரீன்சாட்' அனுப்புங்க...! 'சும்மா இருக்குறதுக்கு இதையாவது பண்ணுவோம்...' - 'ஆப்' மூலம் இளைஞர்களுக்கு வைத்த ஆப்பு...!
- ‘எல்லாரையும் தனிமைப்படுத்துங்க’.. 3 பேருக்கு கொரோனா.. இலங்கை கிரிக்கெட் வாரியம் எடுத்த அதிரடி முடிவு..!
- ‘சென்னையில் விடிய விடிய வெளுத்த மழை’!.. இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கு..? வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்..!
- 'கட்டுக்குள் வந்த கொரோனா!.. ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுமா'?.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
- ஆபத்தான உருமாறிய ‘லாம்ப்டா' வைரஸ்...! 'இது டெல்டா ப்ளஸை விட டேஞ்சர்...' எந்த நாட்டுல கண்டு பிடிச்சிருக்காங்க...? - பீதியாகும் உலக நாடுகள்...!
- ‘எனக்கு விஜய்தான் பிடிக்கும்’!.. ‘பிகில்’ படத்தைக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை.. சென்னையில் நடந்த ருசிகரம்..!
- 'இந்தியா - இலங்கை தொடர் நடக்குமா'?.. இடியாக வந்த செய்தி!.. பதற்றத்தில் வீரர்கள்!.. கலக்கத்தில் கிரிக்கெட் வாரியங்கள்!
- 'ஆகஸ்ட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி'... 'பிரிட்டனில் இது நடக்கலாம்'... எச்சரித்த சுகாதார செயலாளர்!
- ‘இன்னும் கொரோனா பரவல் முடியல’!.. இந்த விஷயத்துல ரொம்ப ‘கவனம்’ தேவை.. உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!