சட்டசபையில் ராஜேந்திர பாலாஜி பற்றிய பேச்சையே காணோம்.. அமைதிகாத்த அதிமுக எம்எல்ஏக்கள்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று துவங்கியது. தமிழக ஆளுநர் ஆர்என் ரவி வழக்கம்போல சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாளில் உரை நிகழ்த்தினார். அப்போது அதிமுக உறுப்பினர்கள் அவையைப் புறக்கணித்து சட்ட சபையில் இருந்து வெளியேறினர்.

Advertising
>
Advertising


இதனிடையே நேற்று, முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக காவல்துறை கர்நாடகாவில் வைத்து கைது செய்தது. இதன்காரணமாக இந்த விஷயம் சட்டப் பேரவையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என பேசப்பட்ட நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் மிகவும் அமைதியாகவே இருந்து வருகின்றனர்.

ராஜேந்திர பாலாஜி கைது

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த கேடி. ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலைவாங்கித் தருவதாகக்கூறி 3 கோடி லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரது முன்ஜாமீன் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை கைது செய்தது.

முதலிரவுக்காக காத்திருந்த புது மாப்பிள்ளை.. 'அந்த நேரத்தில்' மணப்பெண் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி


வழக்கமாக, இதுபோன்ற சூழ்நிலையில் ஆளுங்கட்சியினை குற்றம் சாட்டி கனல் பறக்கும் கண்டனங்கள் வெளிவரும். ஆனால் பன்னீர் செல்வம், கடம்பூர் ராஜூ, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பேசுகையில் கூட ராஜேந்திர பாலாஜி கைது குறித்து ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அப்படி என்ன அவசரம்? அரசியல் உள்நோக்கமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி

திமுக-விற்கு கோரிக்கை

கோவையிலிருந்து பொள்ளாச்சியை பிரித்து மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, கிணத்துக்கடவு உள்ளிட்ட வட்டங்களை இணைத்து பொள்ளாச்சியை தனி மாவட்டமாக்க வேண்டும் என பொள்ளாச்சி ஜெயராமன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில அளித்துப் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் முக்கியப் பதவியில் இருந்த ஜெயராமன் திமுக அரசு மீது நம்பிக்கை கொண்டு கோரிக்கை வைத்ததற்கு நன்றி எனக் கூறினார்.

இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது. திமுக உறுப்பினர்கள் மட்டுமல்லாது அதிமுக உறுப்பினர்களும் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் பேச்சைக்கேட்டு சிரித்தனர்.

ADMK MLA, TAMILNADU ASSEMBLY, MP RAJENDRA BALAJI

மற்ற செய்திகள்