“19 வயது கல்லூரி மாணவியுடன் எம்.எல்.ஏ திருமணம்!”... பெண்ணின் தந்தை மேற்கொண்ட அடுத்தகட்ட நகர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு(38) 19 வயது கல்லூரி மாணவியை காதல் திருமணம் செய்துள்ளார்.

“19 வயது கல்லூரி மாணவியுடன் எம்.எல்.ஏ திருமணம்!”... பெண்ணின் தந்தை மேற்கொண்ட அடுத்தகட்ட நகர்வு!

திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார் இப்பெண். இவரது தந்தை சுவாமிநாதன், தியாகதுருகத்தின் ஒரு கோவிலில் குருக்களாக இருக்கிறார். இந்த சூழலில், தனது மகளை விடவும் 20 வயது மூத்தவரான பிரபு தன் மகளை கடத்திச் சென்று திருமணம் செய்துவிட்டதாகக் கூறியுள்ளார் பெண்ணின் தந்தை சுவாமிநாதன்.

இதனிடையே அர்ச்சகரின் மகள் முழு விருப்பத்துடனேயே பிரபுவை திருமணம் செய்ததாக பிரபு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தவிர, அப்பெண் மணக்கோலத்தில் புன்னகையுடன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆனால் தன் மகளை மீட்காவிட்டால் உயிரை மாய்த்துக்கொள்வதாக கூறிய குருக்களை போலீஸார் மீட்டனர்.

ADMK MLA married priest daughter father complaints

இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பிரபு தனது மகளை கடத்தி சென்றதாக பெண்ணின் தந்தை  சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள்ன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்