'இந்த' ஒரு விஷயம்... 'இந்தியாவிலேயே தமிழகம் தான் பெஸ்ட்!'.. அதிமுக அரசின் சாதனைகளை அடுக்கிய முதல்வர் பழனிசாமி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சட்டமன்ற தேர்தலை ஒட்டி அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துவைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். 

'இந்த' ஒரு விஷயம்... 'இந்தியாவிலேயே தமிழகம் தான் பெஸ்ட்!'.. அதிமுக அரசின் சாதனைகளை அடுக்கிய முதல்வர் பழனிசாமி!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தேர்தல் தேதி நெருங்கி வருவதால் கட்சிகளுக்கு இடையே கூட்டணி, தொகுதி பங்கீடு இறுதிசெய்யப்பட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. இதையடுத்து, கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபடத்தொடங்கியுள்ளன.

admk goverment solves people issues cm edappadi palanisamy

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகிறார். வாகனத்தில் இருந்தவாறு பிரசாரம் மேற்கொண்டு வரும் அவர் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

முதலமைச்சர் பழனிசாமி பிரச்சார நிகழ்ச்சியில் பேசுகையில், "மக்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க கூடிய அரசு, அதிமுக அரசு.காவிரி குண்டாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த அடிக்கல் நாட்டியுள்ளோம். புயல், வெள்ளம், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நாட்டிலேயே அதிக இழப்பீடு பெற்றுத்தந்த அரசு அதிமுக அரசு" என்று குறிப்பிட்டார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்