அதிமுக பொதுக்குழு வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தனிநீதிபதி வெளியிட்ட தீர்ப்பு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது.
Also Read | இது புதுசால்ல இருக்கு.. விநாயகருக்கு ஆதார் கார்டு வடிவில் சிலை.. பிறந்த தேதிலாம் இருக்கா..?
பொதுக்குழு
அதிமுக-விற்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என கட்சியினர் சிலர் கருத்து தெரிவித்திருந்தனர். இதனையடுத்து பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இது நீதிமன்றம் வரையில் சென்றது.
இந்நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில், ஓ.பன்னீர் செல்வத்தை அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நான்கு மாதங்களில் தேர்தல் நடைபெறும் எனவும் அதுவரையில் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக இருப்பார் எனவும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
வழக்கு
முன்னதாக இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார் ஓபிஎஸ். ஆனால், நீதிபதி ராமசாமி கிருஷ்ணன் அந்த மனுவை தள்ளுபடி செய்திருந்தார். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்கு சென்றிருந்தார் இந்த வழக்கை ஓபிஎஸ். உச்சநீதிமன்ற நீதிபதிகள் உயர்நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்கலாம் என உத்தரவிட்டனர். இதனையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், "அதிமுகவில் கடந்த ஜூன் 23-ம் தேதிக்கு முன் இருந்த நிலையையே பின்பற்ற வேண்டும். அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம், செயற்குழு கூட்டம் தனித்தனியே நடத்தப்படக் கூடாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும்" என தீர்ப்பளித்தார் நீதிபதி.
மேல்முறையீடு
இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த மாதம் 25-ந்தேதி உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Also Read | Complaint கொடுத்த பெண்ணையே கரம்பிடித்த வாலிபர்.. சிறைக்கு வெளியே டும்..டும்..!
மற்ற செய்திகள்
55 வயசுல 5-ஆவது கல்யாணம்.. அப்பா போட்ட பிளான்.. ஸ்பாட்டுக்கே போன பிள்ளைங்க.. அடுத்து நடந்த சம்பவம்.?
தொடர்புடைய செய்திகள்
- அதிமுக: பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்.. நீதிபதி வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!
- ADMK தலைமை அலுவலக சீல் அகற்ற கோரிய வழக்கு.. "சாவிய இவர்கிட்ட ஒப்படைங்க.."சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!
- "என்னை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.. EPS-ஐ அடிப்படை உறுப்பினர் பதிவியில் இருந்து நீக்குகிறேன்".. OPS பேட்டி..!
- தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக
- ஒரே வாக்கில் மாறிய முடிவு.. பாஜக வேட்பாளர் அசத்தல் வெற்றி
- மன்னிக்கலாம்.. 'சசிகலா' பற்றி 'ஓபிஎஸ்' குட்டிக்கதை? 'அதிமுக'வில் சலசலப்பு!!
- கலைஞர் உணவகம் என்ற பெயர் வைக்க முடிவா? ஓபிஎஸ் கேள்வி..!
- பாஜகவிற்கு தாவிய வழிகாட்டு குழு உறுப்பினர்.. அதிர்ச்சியில் அதிமுக-வினர்.. பின்னணி என்ன?
- “கடும் நடவடிக்கை எடுங்கள்”!.. முதல்வர் ஸ்டாலினுக்கு ‘ஓபிஎஸ்’ வைத்த கோரிக்கை..!
- 'பேரிடியாய் வந்த செய்தி'... 'ஓபிஎஸ் மனைவி காலமானார்'... சென்னை மருத்துவமனையில் பிரிந்த உயிர்!