முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்- நீதிமன்றம் உத்தரவு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது உயர் நீதிமன்றம்.

Advertising
>
Advertising

ஆவினில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது. அதனால் அவரை கைது செய்ய தமிழக போலீசார் விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார்.

மேலும் முன்ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனிடையே தலைமறைவாக இருந்த ராஜேந்திர பாலாஜிப் பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் கர்நாடகாவின் ஹாசன் பகுதியில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக போலீசார் கடந்த 5-ம் தேதி கைது செய்தனர். மதுரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த ராஜேந்திர பாலாஜி தனக்கு ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சென்னையில் வழக்குப் பதிவாகி உள்ள நிலையில் 300 கி.மீ-க்கும் அதிகப்படியான தொலைவில் உள்ள மதுரை சிறையில் ஏன் அடைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியது. பின்னர் ராஜேந்திர பாலாஜிக்கு 4 வார காலம் நிபந்தனை ஜாமின் வழங்குவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

AIADMK, ராஜேந்திர பாலாஜி, உச்ச நீதிமன்றம், நிபந்தனை ஜாமின், ADMK EX-MLA, RAJENDRA BALAJI, CONDITION BAIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்