"தடையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு!".. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு கண்டு, தமிழகத்தில் தொழில்வளம் பெருகச் செய்தது அதிமுக அரசு என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஓசூர் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, தளி பாஜக வேட்பாளர் நாகேஷ் குமாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
ஓசூரில் பிரச்சாரம் செய்த அவர், அந்த தொகுதிக்கு அதிமுக ஆட்சியில் வந்துள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளை பட்டியலிட்டார்.
மின்வெட்டுப் பிரச்சனைக்கு தீர்வு, சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, கொரோனா காலத்திலும் தொழில்முதலீடுகளை ஈர்த்தது என அதிமுக அரசு தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்கியிருப்பதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், தேர்தலுக்காக திமுகவினர் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து வருவதாகக் குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிசாமி, ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள், மாதந்தோறும் 1,500 ரூபாய் உதவித் தொகை, இலவச வாஷிங்மெஷின் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டினார்.
அதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் பாமக தலைவர் ஜி.கே.மணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் தருமபுரி மாவட்டத்தில் 45 மினி கிளினிக் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
யாரும் கோரிக்கை வைக்காமலேயே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு திட்டத்தை அமல்படுத்தியதாகவும் அவர் கூறினார். கொரோனா காலத்திலும் 60 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்த்த ஒரே மாநிலம் தமிழகம் எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வீடு ரொம்ப பழசா இருக்குதேன்னு வருத்தப்படாதீங்க...' 'தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிகள்...' - எங்க ஆட்சியில மட்டும்தான் கரண்ட் கட் கிடையாது...!
- ‘மனசு வேதனையா இருக்கு’!.. ‘எங்கபோனாலும் இதையே கேட்குறாங்க’.. தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்த நடிகர் மன்சூர் அலிகான்..!
- அந்த நாட்டுல கரும்ப வச்சு 'அத' உற்பத்தி பண்றாங்களே...! 'அதே மாதிரி இங்கையும் பண்ணுவோம்...' - பரப்புரையில் சீமான் அதிரடி...!
- "இந்த ஒரு விஷயத்துக்காக... ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்"!.. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த முதல்வர் பழனிசாமி!
- 'சாப்பிட்ட பிரியாணிக்கு காசு கேட்டா பாக்ஸிங் பண்றது யாரு?'... தேர்தல் பரப்புரையில் அதிரவைத்த முதல்வர்!
- 'தீவிர காங்கிரஸ்காரர்'... 'மக்கள் சேவையே பிரதானம்'... ‘மீண்டும் நாங்குநேரியில் களம் காணும் டாக்டர் ரூபி மனோகரன்!’
- VIDEO: 'பேசி பேசி மங்கிப் போன முதல்வர் தொண்டை'!.. "தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது"!.. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்!.. என்ன சொன்னார் முதல்வர்?
- 'ஒரு விவசாயி படுற கஷ்டம் இன்னொரு விவசாயிக்கு தான் புரியும்...' 'ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது அவங்க தான்...' - தமிழக முதல்வர் சூறாவளி பரப்புரை...!
- 'மொட்ட மாடியில ஒரே சத்தமா இருக்கேன்னு திரும்பி பார்த்தா...' 'தமிழக முதல்வருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அரியர் மாணவர்கள்...' - முதல்வரை வரவேற்ற மாணவர்கள்...!
- 'இளைஞர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்'... 'ரூ.50 ஆயிரம் கோடியில் முதல்வரின் மெகா பிளான்'... எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!